“பாகிஸ்தான் விபசார வீடு” என்று, படுமோசமாக விமர்சித்துப் பேசிய ஆப்கானிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடனான உறவை, பாகிஸ்தான் தற்போது துண்டித்துள்ள நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது ஆளும் அரசுக்கு எதிரான தலீபான் பயங்கரவாதிகளின் நடத்திய போரில், அந்நாட்டில் லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில், அமைதியை நிலை நாட்ட நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான பேச்சு வார்த்தையிலும் கூட, எந்த விதமான சுமுக முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப், அந்நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “பாகிஸ்தான், ஒரு விபசார வீடு” என்று, மிக காட்டமாக விமர்சித்துப் பேசினார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசிய இந்த கருத்து, பாகிஸ்தான் ஊடகத்திலும், அந்நாட்டின் சமூக வலைத்தளங்களிலும் பெரும் வைரலானது.

ஹம்துல்லா மொஹிப் பேசிய இந்த கருத்து, பாகிஸ்தான் அரசுக்கும் கடும் ஆத்திரத்தை மூட்டியது. இது குறித்து, அந்நாட்டின் பெயர் வெளியிட விருப்பமில்லாத மூத்த அதிகாரி ஒருவர் பேசும் போது, “ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சமீபத்திய பேச்சால், அவருடன் இனி பாகிஸ்தான் அரசு இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடாது” என்று, உறுதிப்படத் தெரிவித்தார்.

“ஆப்கானிஸ்தான் அரசிடம், நாங்கள் எங்களது மிக கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளோம் என்றும், இது போன்ற பேச்சுகள் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்து கொள்ளல் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைத்து உள்ளது” என்றும், மிக வன்மையாகக் கண்டித்தார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசிய இந்த கருத்துக்கு, பாகிஸ்தான் அரசு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. 

மேலும், இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாகப் பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பு மீது, மொஹிப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

அதன்படி, “தலீபான்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களை வழி நடத்திச் செல்கின்றனர்” என்றும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

இந்த பயங்கரமான குற்றச்சாட்டுக்கு, பாகிஸ்தான் தலைவர்கள் பலரும், “இது அடிப்படை அதரமற்ற குற்றச்சாட்டுகள்” என்றும், முற்றிலுமாக தொடர்ந்து மறுத்து வருகின்றனர். 

இதனிடையே, “பாகிஸ்தான் நாட்டில், பாஷ்டூன்கள் மற்றும் பலூச் இன மக்கள் உள்ளிட்ட பழங்குடிகளாக உள்ளவர்கள் கூட அந்நாட்டு அரசாட்சியில் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தங்களது உரிமைகளைப் பெற அவர்கள் இப்போது வரை தொடர்ந்து பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றன” என்றும், மொஹிப் தனது குற்றச்சாட்டில் முக்கியமாகப் பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசிய இந்த கருத்துக்கள், தற்போது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளது. இதனால், இரு நாட்டின் தலைவர்களுக்கு இடையே வார்த்தை யுத்தம் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.