ஊரடங்கை மீறி செயல்பட்ட பெண்ணிற்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் உதட்டோடு உதடு முத்தமிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரு நாட்டில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பெரு நாட்டிலும் கொரோனா ஊரடங்கு தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு இன்றளவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு கெடுபிடிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கொரோனா ஊரடங்கைக் கண்காணிக்கக் காவல் துறை அதிகாரிகள், தீரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியாக, காவல் துறை அதிகாரிகள் தீவிரமான ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தபோது, அந்நாட்டின் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய ஒரு அழகிய இளம் பெண் ஒருவர், காவல்துறையிடம் வசமாகச் சிக்கிக்கொண்டார். 

அப்போது, அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தொடர்ச்சியாக கேள்விக்கொண்டே இருந்தனர். அத்துடன், அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணிடம் அபராத பணத்தை வாங்கச் சென்ற போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அந்த பெண்ணின் அழகில் கிரங்கப்போய் அல்லது சபலப்பட்டு, அந்த பெண்ணை உதட்டோடு உதடு வைத்து கண் இமைக்கும் நேரத்தில் முத்தமிட்டு உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அப்படியே அங்கேயே ஸ்தம்பித்துப் போய் நின்று உள்ளார். இதனையடுத்து, அந்த போலீஸ் அதிகாரி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

போலீசார், இப்படியாக அத்து மீறி பெண்ணை உதட்டோடு உதடு முத்தமிட்ட காட்சியானது, அங்கிருந்து சிசிடிவி கேமிராவில் அப்படியே பதிவாகி இருந்தது. 

இதனை, சில குறும்புக்காரர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ, அந்நாடு முழுவதும் பரவிய நிலையில், போலீசாரின் இந்த முத்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும், அந்நாட்டின் பல்வேறு ஊடகங்களிலும் போலீசாரின் இந்த அத்துமீறல் முத்தக் காட்சிகள் ஒளிபரப்பாகி பெரும் கண்டன குரல்களை எழுப்பியது. இந்நாட்டின் ஊடகங்கள் இதனை பெரும் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டன.

இதன் காரணமாக, ஊரடங்கில் தன் பணியைச் சரியாகச் செய்யாமல், பொது மக்களில் ஒருவரான இளம் பெண்ணை முத்தமிட்ட குற்றத்திற்காக, சம்மந்தப்பட்ட அந்த காவல் துறை அதிகாரி, அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

அதே நேரத்தில், போலீசார் இளம் பெண்ணை உதட்டோடு உதடு முத்தமிட்ட காட்சியானது, இணையத்தில் பரவி பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.