ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரி ஒருவர், தன்னுடைய ஜூம் ஆஃப் கேமராவை ஆஃப் செய்யாமல், தனது பெண் செயலருடன் அலுவலகத்திலேயே உல்லாசத்தில் ஈடுபட்டதால், ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் அந்த உல்லாசக் காட்சியை இலவசமாகப் பார்த்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அரசு அதிகாரியின் ஜூம் ஆஃப் கேமரா உல்லாச காட்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் தான் அரங்கேறி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பல மாகாணங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்துரையாடும் ஆலோசனைக் கூட்டமானது ஜூம் ஆஃப் கேமரா மூலம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் காவிட் மாகாணம், பாத்திமா டோஸ் கிராமத்தில் பணியாற்றும் அரசு அலுவலர் கேப்டன் ஜீசஸ் எஸ்டில், ஜூம் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் தயார் ஆனார். 

அப்போது, அந்த அரசு அதிகாரி முதலில் ஜூம் ஆஃப் கேமராவை ஆன் செய்து பரிசோதித்துப் பார்த்துள்ளார். அது வேலை செய்துள்ளது. இதனையடுத்து, ஜூம் ஆஃப் கேமராவை ஆஃப் செய்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த கேமரா ஆஃப் ஆகவில்லை. இதனால், அந்த அலுவலகத்தில் அரங்கேறிய ஒட்டுமொத்த காட்சிகளும், அந்த ஜூம் ஆஃப் மீட்டிங்கில் இணைந்திருந்த அனைவரும் நேரலையில் பார்க்க நேர்ந்தது.

ஆனால், இது எதுவுமே தெரியா அந்த அரசு அதிகாரி கேப்டன் ஜீசஸ், தனது அலுவலக அறையின் ஒரு மூலையில் தன்னுடைய பெண் செயலருடன்  உல்லாச இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் உல்லாச இன்பத்தில் ஈடுபட்ட பிறகு, எதுவும் தெரியாத குழந்தையைப் போல, அவர் மீண்டும் ஜூம் ஆஃப் கேமரா மூலமாக நடைபெறும் மீட்டிங்கில் கலந்து கொண்டார்.

ஆனால், இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றொரு அரசு ஊழியர் ஒருவர், தன்னுடைய சிஸ்டத்தில் முழுமையாகப் பதிவு செய்துள்ளார். 

அதன் தொட்ச்சியாக, அந்த காட்சிகளைப் பதிவு செய்த அந்த அரசு ஊழியர் அமைதியாக இல்லாமல், இந்த உல்லாச காட்சிகளை இணையத்தில் பரவி விட்டுள்ளார். இதன் காரணமாக, அந்த உல்லாசப் பதிவானது சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. 

இந்த உல்லாச காட்சியானது சம்மந்தப்பட்டவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து. சம்மந்தப்பட்ட இரு அரசு அதிகாரிகளையும் உயர் அதிகாரிகள் நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

அப்போது, அந்த அரசு அதிகாரியும், அவரது பெண் செயலரும் தங்களது இத்தகைய செயலுக்காக தங்களது மூத்த அரசு அலுவலர்களிடம் மன்னிப்பு கேட்டார்கள். 

ஆனாலும், அவர்கள் இருவரையும் அரசு பணியைவிட்டு நீக்க,  உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், முன்னதாக பிரேசில் நாட்டில், ரியோ டி ஜெனிரோ நகர சபையின் ஜூம் ஆஃப் கேமரா மூலம் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் போது,  ஒரு ஜோடி இதே போன்று நெருக்கமாக இருந்தது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.