பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

philippines cyclone

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதை தொடர்ந்து அங்கு கனமழை கொட்டியதால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் பெயர்த்து விழுந்ததுடன் கட்டடங்களும் இடிந்து விழுந்தன. மேலும் சூறாவளி பாதிப்பிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பிலிருந்து தப்பித்தனர்.

மேலும் இதே புயல் பலவான் மாகாணத்தில் மேற்கு நோக்கி வீசும் போது மணிக்கு 155 கிலோமீட்டர்  வேகத்தில் காற்று வீசியது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூறாவளிக் காற்றால் பலத்த மழை பெய்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சூறாவளிக் காற்றால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. 

அதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது. உள்ளூர் அவசரகால பணியாளர்கள் சாலைகளில் கிடல்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.