கல்லூரியில் லவ் புரோபோஸ் செய்த இளம் காதல் ஜோடியினர், கட்டி அணைத்து ரொமன்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தான் நாட்டில் தான் இப்படியான ஒரு காதல் ரொமன்ஸ் காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி கல்லூரியான லாகூர் பல்கலைக்கழகத்தில் (University of Lahore), மாணவ - மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற கல்லூரி மாணவி ஒருவர், தான் படித்து வரும் அது கல்லூரி வளாகத்தில் தன்னுடன் படித்து வரும் சக மாணவன் ஒருவரிடம் தனது காதலை அனைவரும் முன்னிலையிலும் வெளிப்படுத்தினார். 

இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருவதால், அது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “காதலுக்கே ஏற்ற நிலையில், தரையில் முட்டிப்போட்டு அமர்ந்தபடி, அந்த இளைஞரிடம் ரோஜா பூ கொடுத்து, அந்த இளம் பெண் தன்னுடைய காதலை வெட்கப்பட்டுக்கொண்டே வெளிப்படுத்துகிறார். இதனை சிரித்துக்கொண்டும்,  வெட்கப்பட்டுக்கொண்டும், அந்த இளைஞன் அந்த இளம் பெண் தந்த ரோஜாவை வாங்கிக்கொள்கிறார்.

இதனையடுத்து, காதலுக்கே ஏற்ற நிலையில், தரையில் முட்டியிட்டு அமர்ந்தபடி இருந்த அந்த பெண் எழுந்த நிலையில், அந்த காதலன் காதலை ஏற்றுக்கொண்டதின் வெளிப்பாடாக அந்த பெண்ணை கட்டியணைத்து தனது அன்பை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்துகிறார்”  

இந்த அழகான காதல் காட்சியினை அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து ஆரவாரம் செய்கின்றனர். பலரும், அந்த காதலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சத்தம் போட்டு ஆனந்த பூரிப்படைகின்றனர். 

இதனை, அந்த கல்லூரியைச் சேர்ந்த குறும்புக்கார இளைஞனர் ஒருவர், இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பான வீடியோ, வீடியோ சமூக 

வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கும் தகவல் சென்று உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக அந்த காதல் ஜோடியினரை விசாரணைக்கு வருமாறு கல்லூரி நிர்வாகம் அழைத்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் இருவரும் விசாரணைக்கு செல்லவில்லை என்றும், கூறப்படுகிறது.

இதனால் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கையில் அடிப்படையில் அந்த காதல் ஜோடியினர் தற்போது, கல்லூரியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக லாகூர் பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

அத்துடன், லாகூர் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் இருவரும் நுழையவும் அதிரடியாகத் தடை விதித்தும், அக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டோ ஷர்தாரி, காதலுக்கு எதிரான கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார். இதுவும், தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டில் இது பேசும் பொருளாக மாறி உள்ளது.