கொரோனாவை எதிர்த்து ஒற்றுமையாக போராடி மீண்டு வர இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனாவின் இரண்டாவது அலை மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியா அபாயகரமான நிலையில் உள்ளது.  நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிர்பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளால் கொரோனா நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு சீனாவின் அயல்நாட்டுதுறை தூதர் தெரிவித்திருந்தார். தற்போது, கொரோனாவை எதிர்த்து ஒன்றாக போராடுவோம் என இந்தியாவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டரில், ”அண்டை நாடுகளிலும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். கொரோனாவின் ஆபத்தான இரண்டாவது அலையை எதிர்கொண்டு வரும் இந்திய மக்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். மனித இனத்துக்கே எதிரான இந்த கொரோனாவை உலக மக்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.