உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் எடுத்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் குறிப்பாக இந்தியாவின் நிலை அபாயகரமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் அண்டை நாடான இலங்கையில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகமெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை விட அதிக சக்தி வாய்ந்ததாக இந்த புதிய வைரஸ் இருக்கிறது என்று மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாகப் பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை கொரோனா  வைரஸ் மூன்றாவது அலையை நோக்கிச் செல்கிறது என்று கூறியுள்ளார். 

இலங்கையில் அதிக சக்தி வாய்ந்த புதிய வகை வைரஸ் 3-வது அலை நோக்கிச் சென்றால், இலங்கையின் நிலை மோசமாக இருக்கும் என்று அந்நாட்டுச் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார வல்லுநர்களின் இந்த எச்சரிக்கை இலங்கை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.