மியான்மர் நாட்டில் தான் இப்படி ஒரு ஆச்சரிய காதல் மலர்ந்து, அனைத்து தரப்பு மக்களையும் கடும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

“காதலுக்கு கண் இல்லை என்பது போல், காதலுக்கு வயதும் இல்லை என்பதை, இந்த காதல் ஜோடி இந்த உலகத்தில் ஒரு புது மொழியாக சொல்ல வருகிறதோ?” என்றுதான் தோன்றுகிறது. 

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஜோ, தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், கல்லூரியிலும் படித்து வருகிறார்.

அதே போல், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டேவிட். இவருக்கு 77 வயது ஆகிறது. இவர், அந்நாட்டில் இசை அமைப்பாளராக உள்ளார்.

அத்துடன், டேவிட்டிற்கு இளம் வயதிலேயே திருமணம் ஆன நிலையில், அவருக்கு தற்போது 77 வயது ஆன போதிலும் அவருக்கு  குழந்தைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், காதலுக்கு கண் இல்லை என்பது போல், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஜோ, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 77 வயதாகும் டேவிட் என்பவரை டேட்டிங் ஆப் மூலமாக சந்தித்து உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் டேட்டிங் ஆப் மூலம் தொடர்ந்து பேசி வந்த நிலையில், இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது.

இப்படியாக, கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் காதலித்து வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, இருவரின் நாட்டிற்கு இடையே ஆயிரக்கணக்கான மைல் தூரம் தொலை என்றாலும், அவர்களது காதலானது 20 - 77 என்ற வயது வித்தியாசமின்ற, அவர்களது காதல் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்து இருக்கிறது. 

முக்கியமாக, அந்த இளம் பெண்ணுக்கும் அந்த முதியவருக்குமான வயது இடைவெளியானது 57 வயதாகும். என்றாலும், இவர்களின் காதலுக்கு இந்த இடைப்பட்ட 57 வயது ஒன்றும் ஒரு தடையாக இல்லை என்றும் அவர்களது எண்ணங்களாக இருக்கிறது.

அதாவது 20 வயதான இளம் பெண் ஜோ, டேட்டிங் ஆப் மூலமாக கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஒரு வழிகாட்டியைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். 

அத்துடன், தனது படிப்பிற்கு நிதி உதவி செய்யும் ஒரு வழிகாட்டியை ஜோ தேடிய நிலையை அவரையும் கண்டுபிடித்தார். 

அதே நேரத்தில், 77 வயதாகும் டேவிட், காதலிக்கும் மன நிலையுடன் எப்போதாவது இந்த டேட்டிங் தளத்திற்கு வருவதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். 

முக்கியமாக, 77 வயதான டேவிட், தன்னை ஒரு போதும் வயதானவராகக் கருதுவதில்லை என்றும், தன்னை எப்போதும் இளமையாகவே வைத்திருப்பதாகவும் அவர் கூறி வந்திருக்கிறார்.

இப்படியாக, டேட்டிங் ஆப் மூலமாக டேவிட்டை கண்டுபிடித்த ஜோ, அவருடன் பழகி வந்திருக்கிறார்.

என்றாலும், “இவர்கள் இருவரும் பரஸ்பரமாக தங்களை காதலன் என்றும், காதலி என்றும் அழைப்பதைத் தவிர்ப்பதாக” டேவிட் கூறி உள்ளார்.

மேலும், “ஜோவின் வழிகாட்டியாகவும், வாழ்க்கைத் துணையாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும்” டேவிட் கூறியுள்ளார்.

குறிப்பாக, “விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், ஜோவின் பாஸ்போர்ட் தயாரான உடன், என்னை சந்திக்க அவர் இங்கிலாந்துக்கு வருவார்” என்றும், டேவிட் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தற்போது, “கொரோனா தொற்றால் உள்நாட்டு கட்டுப்பாடு காரணமாக இருவரும் விலகி இருப்பதாக” டேவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.