இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தற்போது, உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆல்பபெட் (Alphabet) நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜினை ஏழாம் இடத்திற்குத் தள்ளி விட்டு, முகேஷ் அம்பானி ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.

குறிப்பாக, 2020 மார்ச் மாதம் கோரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஊரடங்கு போடப்பட்ட இந்த காலத்திலிருந்து தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அசூர வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த மே மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் அனைத்தும் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 வாரங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அதாவது 65 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் டாப் 10 இடத்திற்குள் வந்தார். பின்னர் இரண்டே வாரத்தில், வாரன் பஃப்பெட்டை முந்தி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு முன்னேறினார்  முகேஷ் அம்பானி.

அவரின் அசூர வளர்ச்சியினால்  தற்போது, உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில், எலோன் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை பின்னுக்குத் தள்ளி, 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களில் அவரின் சொத்து மதிப்பில் 2.17 பில்லியன் டாலர் உயர்ந்த நிலையில், தற்போது அவர் உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளார். 

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல்!

1.ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 183 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 183 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.  

2.பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பட்டியலில் இரண்டாம் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 115 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 

3. பெர்னார்ட்
LVMH நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்ட் மற்றும் அவரின் குடும்பத்தினர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளனர். அவர்களது நிகர சொத்து மதிப்பு 94.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்

4. மார்க் ஸக்கர்பெர்க்
பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளனர். அவர்களது நிகர சொத்து மதிப்பு 90.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

5. ஸ்டீவன் பால்மர் 
அமெரிக்க தொழிலபதிபர் ஸ்டீவன் பால்மர் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 76.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

6. முகேஷ் அம்பானி
இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 72.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

7. லாரி பேஜ்
 அமெரிக்கக் கணினியியல் வல்லுநர் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஏழாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 71.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 

8. வாரன் ஃபப்பெட்
Berkshire Hathaway நிறுவனத்தின் சி.இ.ஓ வாரன் ஃபப்பெட் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 69.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

9. செர்ஜே பிரின்
கணினி வல்லுநர் செர்ஜே பிரின் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 69.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்

10. எலான் மஸ்க்
 அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பட்டியலில் பத்தாம் இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 68.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

- பெ. மதலை ஆரோன்.