பாகிஸ்தான் நாட்டில் குழந்தையின் கண் முன்னே தாய் பலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதால், குற்றவாளிகளைத் தூக்கிலிட வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் ஹைவேயில் பெண் ஒருவர், தன் குழந்தை உடன் நள்ளிரவு நேரத்தில் காரல் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, நன்றாக ஓடிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் கார், லாகூர் ஹைவேயில் வந்து கொண்டிருக்கும் போது, நடு வழியிலேயே எரிபொருள் தீர்ந்து போய் அப்படியே நின்று உள்ளது.

இதனால், பயந்து போன அந்த பெண், தனக்கு அவசர உதவி வேண்டி, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தனது போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மேலும் பயந்த அந்த பெண், காரின் அனைத்து கண்ணாடிகளையும் அடைத்துக்கொண்டு, தனது குழந்தையுடன் காரின் உள்ளேயே போலீசாரின் உதவிக்காகக் காத்து இருந்து உள்ளார். 

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர், காரின் கண்ணாடியை உடைத்து, அந்த பெண்ணையும், அவரது குழந்தையையும் வெளியே சாலையின் ஓரம் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறு குழந்தையின் கண் முன்னாடியே, அந்த பெண்ணை பலரும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை நேரில் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறு பிள்ளை அழுதுகொண்டு அம்மாவை அழைக்கிறது. ஆனால், அந்த இறக்கமற்ற மனித மிருகங்கள், அந்த குழந்தை அழுவதைப் பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல் பலமுறை மாறி மாறி அந்த காம வெறிப்பிடித்த மிருகங்கள் மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து, தங்களது வெறியை ஒட்டு மொத்தமாக அந்த பெண்ணின் மீது இறக்கி வைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

மறு நாள் இந்த சம்பவம், அந்த பகுதி முழுவதும் பரவிய நிலையில், அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. 

இதனால், கொதித்து எழுந்த மக்கள், போராட்டத்தில் இறங்கினர். அத்துடன், “பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்” என்று அந்நாட்டு மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், இதுவரை 15 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் வெளியே சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்லி பேட்டி அளித்தார். இதனால், அந்நாட்டு மக்கள் இன்னும் கோபம் அடைந்து, போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாகப் பாகிஸ்தானில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், “இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து, அவர்களுக்குத் தகுந்த தண்டை பெற்றுத் தந்து, நீதி நிலை நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குழந்தையின் கண் முன்னே தாய் பலரால் தொடர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பாகிஸ்தான் நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.