பிலிப்பைன்சில் 92 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 40 பேர் காயங்களுடன் மீட்டகப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் C-130 என்கிற ராணுவ விமானம் ஒன்று இன்று காலையில் எதிர்பாரத விதமாக திடீரென்று விபத்துக்கு உள்ளானது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் சுலூ என்னும் பகுதியிலிருந்து புறப்பட்ட அந்நாட்டின் ராணுவ விமானம், புறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.

இதனால், விமான ஓடுதளப் பாதையிலிருந்து விலகியதால், அந்த விமானத்தை அதன் விமானடி கட்டுப்படுத்த முயன்று உள்ளார். ஆனால், அது தோல்வியில் முடியவே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  எதிர்பாரத விதமாக திடீரென்று விபத்துக்கு உள்ளானது. 

விமானம் கீழே விழுந்த வேகத்தில், பல பாகங்களாக சிதறி விழுந்தது என்றும், இதில் பெரும்பாலன பகுதிகள் கீழே விழுந்த வேகத்தில் தீ பற்றி எரிந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின் போது, அந்த விமானத்தில் மொத்தம் 92 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தினர் எனவும் முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.

அதாவது, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், சமீபத்தில் அந்நாட்டில் நடைபெற்ற ராணுவ அடிப்படை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
 
அந்நாட்டில், தீவிரவாத தடுப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. 

இந்த விபத்து நடந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், துரதமாக செயல்பட்டு, முதலில் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்த விமனத்தில், தீயை அணைத்தனர்.

அதன் பிறகு, மீட்புப் பணிகளில் மும்முரமாக நடைபெற்ற நிலையில், கிட்டதட்ட 40 பேர் படுகாயங்களுடன் மீட்டகப்பட்டு உள்ளதாகவும், இது வரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் ராணுவ செயலர் டெல்பின் லோரேன்சா கூறியுள்ளார்.

அத்துடன், விபத்தில் சிக்கிய மீதமுள்ளவர்களை தேடும் பணியானது தற்போது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், “இந்த விமான விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்றும், அந்நாட்டின் ராணுவத் தளபதி சிரிலிடோ சோபேஜனா மற்போது தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, பிலிப்பைன்சில் 92 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது, அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.