பெண்கள் ஆடை அணியாமல் சுதந்திரமாகத் திரியும் வகையில், நிர்வாண காடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் இந்த நிர்வாண காடு, இந்தோனேசியா நாட்டில் தான் இருக்கிறது.

இந்தோனேசியாவில் உள்ள “பப்புவா” என்னும் காடு தான், புனிதமாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு இந்த காட்டில், முழுமையான சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

பெண் சுதந்திரம் பற்றிப் பேசாத ஆட்களே சம காலத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இது பெண்களின் உலகமாக மாறிவிட்டது. ஆனாலும், பெண்கள் அதிகாரம் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

அத்துடன், இன்னொரு பக்கம் பெண்கள் மீதான அடக்கு முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட குற்றங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. 

ஆனால், மறுபுறத்தில், இன்றைய நவீன சமூகத்தில் சமூகத்தில் எல்லா விதமான தடைகளையும் கடந்து பல துறைகளிலும் சாதனைப் பெண்களாகப் பலரும் வெற்றி 
வாகை சூடி வருகின்றனர். 

எனினும், “ஒரு பெண்ணுக்கு எல்லா வகையிலும் சுதந்திரம் கிடைக்கிறதா? என்று கேள்வி எழும் போது மட்டும், அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இதற்கு ஒரு வகையில் பதில் சொல்லும் வகையில் தான், இந்தோனேசியாவில் உள்ள “பப்புவா” என்னும் காடு, புனிதமாகப் பார்க்கப்படுவதுடன், பெண்களுக்கான சுதந்திர காடாகவும் பார்க்கப்படுகிறது.

அதுவும், பெண்களின் பெருமையைப் போற்று வகையில் தான், இந்தோனிசியாவில் இருக்கும் இந்த காடு, ஒரு புனிதமான காடாகத் திகழ்கிறது. 

இந்த புனித காட்டில், பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தப்பித் தவிரும் ஆண்கள் இந்த காட்டில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு இந்த காட்டில் எந்த அளவுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுகிறது என்றால், “பெண்கள் இந்த காட்டில், எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம்” என்ற அளவுக்கு அப்படி ஒரு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த சுந்தர காட்டில், நுழையும் பெண்கள் பல ஆண்டு காலமாக ஆடை அணிவதில்லை. இது பல தலைமுறைகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியமாகவே இது  பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, “இங்கு வசிக்கும் பெண்கள் சிறப்பு வகையான கடல் ஓடுகளைச் சேகரித்து விற்பனை செய்கிறார்கள் என்றும், நகர மக்களால் இந்த காடு அழிக்கப்பட்டு வருகிறது என்றும், காற்று மாசும் அதிகரித்து வருகிறது” என்றும், ஆண்டிரானா மெராட்ஸி என்ற பெண் பப்புவா காடு குறித்து சில தகவல்களைக் கூறுகிறார்.

அத்துடன், “பப்புவா காட்டில், விசித்திரமான பாரம்பரியத்தால் வனம் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டு உள்ளார். 

இந்த காட்டில் நுழைய ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அதனையும் மீறி உள்ளே நுழையும் ஆண்களுக்கு அபராதத்துடன், மிக கடுமையான தண்டனைகளும் அந்நாட்டின் சட்டப்படி வழங்கப்படுகிறது.

மேலும், “பப்புவா காடு” சதுப்புநில காடு என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.