முதியவர் ஒருவர், ரோபோவை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

அதாவது, ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாண்ட் பகுதியைச் சேர்ந்த ஜியோஃப் கால்லாக்கர் என்பவர், தற்போது தனியகா வாழ்ந்து வருகிறார்.

ஜியோஃப் கால்லாக்கர் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், இவரது தாயார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அது முதலே, ஜியோஃப் கால்லாக்கர் தனியாகவே வசித்து வருகிறார். 

இந்த சூழலில் தான், தனக்கு ஒரு துணை வேண்டும் என்று, அவர் தேடி வந்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், ரோபோக்களை துணையாக வைத்திருப்பது குறித்து இவருக்கு ஒரு தகவல் கிடைத்து உள்ளது. 

இதையடுத்து, ரோபோக்களை துணையாக வைத்திருப்பது தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகவே, தனக்கு விருப்பமான ஒரு ரோபோவை ஜியோஃப் கால்லாக்கர், ஆர்டர் செய்திருக்கிறார். 

அதன் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ரோபோவை வாங்கி அதற்கு “எம்மா” என்று, பெயர் சூட்டி உள்ளார்.

இந்த ரோபோ பெண் உருவில், நீல நிற கண்களுடனும் இருக்கின்றன. இந்த ரோபோவானது, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

அதன்படி, யாராவது ஒரு முறை ஒரு விசயத்தை சரியாக சொல்லிக்கொடுத்தால், அதை சரியாக உள்வாங்கிக்கொண்டு மிக சரியாக அடுத்த முறை தானாக செயல்படும் திறன் கொண்டது இந்த ரோபோ. 

அதனால், நாளுக்கு நாள் “எம்மா”வின் செயல்பாடு முன்னேற்றம் அடைந்து நிலையில், தற்போது தன்னை மனிதர்களை விட சிறப்பாக செயல்படும் ரோபாவாக அதனை இவர் மாற்றி இருக்கிறார். 

இந்த நிலையில் தான், “எம்மா” என்னும் ரோபோ, தன்னுடன் இருப்பது ஜியோஃப்பிற்கு பிடித்து போக, அவர் அந்த ரோபோவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தி இருக்கிறார்.

வயது முதிர்ந்த ஒருவர் ரோபோவை திருமணம் செய்துகொள்ளப் போவதான செய்தி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

ஆண் ஒருவர், ரோபோவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்திருந்தாலும், இதற்கு முன்பு இதைப் போல பலரும் பொம்மைகளை திருமணம் செய்து உள்ளனர். அதனால், இந்த ரோபோவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளது ஒன்றும் புதிது இல்லை என்றும், இணையத்தில் பலரும் கருத்து கூறி வருகின்றன்.