உடலுறவின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாலியல் தொழிலாளியை போலீசார் கைது செய்யாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு, காரணமும் இருக்கிறது.

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவி நாட்டின் பாலோம்பே என்னும் நகரில் தான், இப்படி அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

அதாவது, மலாவி நாட்டின் பாலோம்பே பகுதியைச் சேர்ந்த சார்ல்ஸ் மஜாவா என்ற 35 வயதான ஆண் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தார். 

அப்போது, அவருக்கு திடீரென்று மயங்கிய அவர், அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பாலியல் தொழிலாலியான இளம் பெண், இது குறித்து உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், “இளைஞர் சார்ல்ஸ் மஜாவா உயிரிழப்பு குறித்து அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, பாலியல் உறவின்போது சார்ல்ஸ் மஜாவா உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்தனர். 

அத்துடன், பாலியல் உறவின் போது சார்ல்ஸ் மஜாவா உயிரிழந்ததிற்கும், அந்த பெண்ணுக்குத் துளியும் தொடர்பில்லை என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். 

இதன் காரணமாக, அந்த பாலியல் தொழிலாளியை போலீசார் கைது செய்யவில்லை. 

மேலும், உயிரிழந்த சார்ல்ஸ் இறப்பு குறித்து அங்குள்ள மருத்துவ குழுவினர் அறிக்கை ஒன்றையும் அளித்திருந்தனர். அந்த ஆய்வு அறிக்கையில், “தீவிர காம புணர்ச்சியே அவரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம்” என்று, குறிப்பிடப்பட்டு இருந்தது. 

முக்கியமாக, “தீவிர பாலியல் புணர்ச்சியின் போது, மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு இது போன்ற திடீர் மரணத்துக்கு காரணமாக அமைவதாகவும்” மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அதே நேரத்தில், “ஆரோக்கியமான வாழ்வுக்கு உடலுறவு இன்பம் மனித வாழ்வுக்கு மிக மிக அவசியம்” என்றும், பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

“இதய ஆரோக்கியத்துக்கும், உடலுறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்” மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

“சரியான கால இடைவெளியில் உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மிக மிக குறைவாகவே ஏற்படுவதாகவும்” மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

மேலும், “உடலுறவு வைத்துக்கொள்ளாதவர்களுக்கு மனதளவில் பயம் உருவாகி, அதுவே மாரடைப்புக்குக் காரணமாகவும் அமைவதாகவும்” மருத்துவர்கள், தெரிவித்து இருக்கிறார்கள்.

அத்துடன், “உடலுறவு வைத்து கொள்பவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், வாழ்க்கை முறையும் மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும்” மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

“மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளில் உடலுறவு முக்கிய பங்கு வகிப்பதாகவும்” மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.