பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கப்படும் மகாத்துமா காந்தியின் 2வது மகனான மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி ஆவர். இந்த இலா காந்தியின் மகள் தான் 56 வயதான ஆஷிஷ் லதா ராம்கோபின்.

இந்த  56 வயதான ஆஷிஷ் லதா ராம்கோபின், தென் ஆப்பிரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வருகிறார். அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர் ஆவர்.

அத்துடன், ஆஷிஷ் லதா ராம்கோபின் தென் ஆப்பிரிக்கா நாட்டின் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டு வந்தார்.

இப்படியான நிலையில் தான், ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றம், மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான 56 வயதான ஆஷிஷ் லதா ராம்கோபின்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.

அதாவது, அந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று சணல், துணி மற்றும் காலணி உற்பத்தி மற்றும் இறக்குமதி தொழிலை செய்து வருகிறது. இதில், முக்கியமாக மற்ற நிறுவனங்களுக்கு லாப பகிர்வு முறையில், கடன் உதவியும் செய்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்நிறுவன தலைவர் எஸ்.ஆர்.மகாராஜ் என்பவரை சந்தித்த காந்தியின் கொள்ளுப்பேத்தியான லதா ராம்கோபின், நெட் கேர் என்ற மருத்துவமனை நிர்வாகத்திற்காக 3 கண்டெய்னர்கள் சணல் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், அந்த ஆர்டருக்கான இறக்குமதி மற்றும் சுங்க வரி செலுத்த, நிதி நெருக்கடி காரணமாக தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறி, 6.2 மில்லியன் ராண்ட் நிதியை, கடனாக வேண்டும் என்றும், தங்களுடன் லாப பகிர்வு செய்து கொள்வதாகவும் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவற்றுடன், அந்த மருத்துவமனை உடனான சணல் ஒப்பந்தம் குறித்த ஆர்டர் காப்பியையும் அந்த தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், காந்தியின் பேத்தியாக உள்ள லதா ராம்கோபின் சமூக செயற்பாட்டாளர் என்பதாலும், அவர் மீதான நன்மதிப்பு காரணமாகவும், அவர் மீது நம்பிக்கை வைத்த தொழிலதிபர் மகாராஜ், அவருக்கு 6.2 மில்லியன் ராண்டை கடனாக கொடுத்திருக்கிறார். 

அதன் பிறகு, அதே மாதத்தின் இறுதியில் மருத்துவமனைக்கு பொருட்களை சப்ளை செய்து விட்டதாகவும், அதற்கான பணத்தை அந்த நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும், இன்வாய்ஸ் ஆர்டரை லதா காட்டி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், “காந்தியின் பேத்தி லதா, தங்களிடம் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது என்றும், தன்னை அவர் மோசடி செய்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்த தனியார் நிறுவன அதிகாரி மகாராஷ், லதா மீது புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். 

இப்படி, கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது டர்பன் நீதிமன்றம், காந்தியின் பேத்தியான லதாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையானது இந்திய அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.