90ஸ் கிட்ஸ் சினிமா ஸ்டைலில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சைக்கோ கில்லர் கொலை செய்யும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் சினிமாவில் 90 களில் வந்த திரைப்படங்களில் தான், அதிகமாக “பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை கொலை செய்யும் காட்சிகள்” அதிகம் இடம் பெற்று இருக்கும். சொல்லப்போனால், அந்த காலகட்டத்தில் இது போன்ற காட்சிகள் கொண்ட படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கின. அது, அப்போது புதிதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, அந்த 90ஸ் கிட்ஸ் சினிமா ஸ்டைலை நினைவூட்டும் விதமாக, லண்டனில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களைக் கொலை செய்யும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வாழும் 36 வயதான Zahid Younis என்ற நபர், மாயமானார். இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவ செய்த லண்டன் போலீசார் மாயமான 36 வயதான Zahid Younis ன் வீட்டை ஆய்வு செய்தனர்.

அப்போது, அவரது வீட்டில் உள்ள ஒரு ப்ரீசரில் ஈக்கள் மொய்ப்பதை போலீஸார் பார்த்து சந்தேகமடைந்தனர். இதனால், ஒரு வித பயத்துடன் அந்த ப்ரீசரைத் திறந்து பார்த்த போலீசார், கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த ப்ரீசரில் 2 இளம் பெண்கள் சடலமாகத் திணித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அத்துடன், ப்ரீசரில் இருந்த அந்த இரு சடலங்களும் அழுகி நாற்றம் வீசத் தொடங்கியதால், அந்த உடல்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ப்ரீசரில் இருந்த இளம் பெண்களின் பெயர்கள் Mihrican mustafa என்றும், மற்றொருவர் Henriett szus என்பதும் தெரிய வந்தது. இந்த 2 இளம் பெண்களையும் Zahid Younis வெவ்வேறு தருணங்களில் அடித்துத் துன்புறுத்தி கொடூரமாகக் கொலை செய்திருக்கலாம் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். 

இதனால், இந்த பெண்களை Zahid Younis தான் கொலை செய்திருப்பார் என்று சந்தேகப்பட்ட போலீசார், அவர் எங்கே? என்று தேடி உள்ளனர். அப்போது, அவர் அதே பகுதியில் வேறொரு வீட்டில் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, Zahid Younis சுற்றி வளைத்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

அதாவது, Zahid Younis  குறிப்பிட்ட சில காலம் ஒரு பெண்ணை காதலிப்பார். அதன் பிறகு, அந்த காதலியை தன் வீட்டில் சில நாட்கள் அடைத்து வைத்து அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இன்பம் அடைந்து வந்ததும்” தெரிய வந்தது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாமிய முறைப்படி 14 வயது சிறுமி ஒருவரை, திருமணம் செய்து கொண்டு, அந்த சிறுமியையும் வீட்டில் அடைத்து வைத்து, கடும் கொடுமை செய்து வந்ததும்” தற்போது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக 17 வயது சிறுமியிடம் பழகி அவரை தன் காதல் வலையில் வீழ்த்திய அவன், அந்த பெண்ணை தன் வீட்டில் அடைத்து வைத்து கடும் கொடுமைகளுக்கு உட்படுத்தி கடைசியாக, Mihrican mustafa மற்றும் Henriett szus  ஆகிய 2 பெண்களை அடித்துத் துன்புறுத்தியே கொலை செய்து, தன் வீட்டில் உள்ள ப்ரீசரில் அடைத்து வைத்த நிலையில், தற்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டதும் தெரிய வந்தது.

ஆனால், இந்த கொலை குற்றச் சம்பவங்களை அவன் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், போலீசாரிடம் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சினிமா பாணியில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அணு அணுவாய் ரசித்து அனுபவித்து, அதன் பிறகு அவர்களைத் துன்புறுத்தியே கொலை செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், லண்டன் மக்களிடையே பதற்றமும் பயமும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.