76 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடிக்கும் விதமாக, 19 வயது இளைஞன் திருமணம் நிச்சயம் செய்துகொண்ட நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த காதலுக்கு வயது வித்தியாசம் 57.

இத்தாலி நாட்டில் தான், இந்த 57 வயது வித்தியாச காதல் காதை அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

அதாவது, இத்தாலி நாட்டில் கியூசெப் டி அன்னா என்ற 19 வயது இளைஞன், அங்கு படித்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த 19 வயது இளைஞன், இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் வசித்து வருகிறார்.

இந்த இளைஞன் எந்த நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும் நிலையில், டிக்டாக்கிலும் அதிக வீடியோக்களை வெளியிட்டு சற்று பிரபலமானவராக வலம் வருகிறார்.

இந்த சூழலில் தான், இந்த 19 வயது இளைஞன், தனது வாழ்க்கை துணையாக 76 வயது மூதாட்டியை காதலித்து வந்திருக்கிறார். பின்னர், அந்த பெண்ணையே திருமணம் செய்யும் விதமாக, அவரை திருமண நிச்சயம் செய்துகொண்டிருப்பதாகவும், அந்த இளைஞனே தனது டிக்டாக்கில் பகிர்ந்து உள்ளார்.

அதன்படி, கியூசெப் டி அன்னா என்ற 19 வயது இளைஞன், தனது காதல் குறித்தும், தனது காதலி குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த போட்டோவில், கியூசெப் டி அன்னா என்ற 19 வயது இளைஞன், தனது வருங்கால மனைவியான  76 வயதான காதலிக்கு வைர மோதிரத்தை கையில் மாட்டி விடுகிறார். இது தொடர்போன வீடியோவையும் அவர் தனது சமூக தலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

குறிப்பாக, அந்த படங்களுக்கு கீழே “இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம் மட்டுமே” என்றும், அந்த 19 வயது இளைஞன் பதிவிட்டு உள்ளார்.

மிக முக்கியமாக, கியூசெப் டி அன்னா என்ற 19 வயது இளைஞனின் படங்கள் மற்றும் வீடியோவை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

மேலும், இந்த பதிவுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்து உள்ளனர்.

முக்கியமாக, இந்த பதிவால் அந்த 19 வயது இளைஞனை பலரும் டிரோல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2003 ஆம் ஆண்டு பிறந்த டி அன்னாவுக்கும், கடந்த 1946 ஆம் ஆண்டு பிறந்த அந்த மூதாட்டிக்கும் இடையே கிட்டதட்ட 57 வயது வித்தியாசம் என்றும், இருந்த போதிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்யப்போகும் செய்தி, மிகவும் விநோதமானது என்று கூறப்படும் நிலையில், இந்த செய்தி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.