பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டுப் பெற்ற டான்சானியா நாட்டை சேர்ந்த இணைய பிரபலம் கிலி பாலை, மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கடுமையாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியா நாட்டின் பழங்குடியினத்தை சேர்ந்த கிலி பால் என்பவர், சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவராக வலம் வருகிறார். 

டான்சானியா நாட்டைச் சேர்ந்த கிலி பாலும், அவரது சகோதரியான நீமாவும், சேர்ந்து இணையத்தில் பிரபலமானவர்களாக அறியப்படுகிறார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து, இணையத்தில் ரீல்ஸ் மூலம் அதிக ரசிர்கள் பட்டாளத்தை தங்கள் பக்கம் வைத்து உள்ளனர்.

குறிப்பாக, அண்ணன் - தங்கையான இவர்கள் இவரும், “கோலிவுட், பாலிவுட் பாடல்களுக்கு நன்றாக பொருந்தும் படியான வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு” உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி உள்ளனர். 

ஆனால், அண்ணன் - தங்கையான கிலி பால் மற்றும் இவரது சகோதரி நீமா ஆகிய இருவரும், கால்நடைகளை மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்கள். 

இதன் காரணமாகவே, கிலி பால் மற்றும் இவரது சகோதரி நீமா ஆகியோர், சினிமா படங்களில் பிரபலமாகும் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ரீல்ஸ் மூலம் இவர்கள் நடித்து காட்டுவதை இணையவாசிகள் வெகுவாக பாராட்டு வருகின்றனர். 

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய குடியரசுத் தினத்தன்று இவர்கள் இருவரும் இந்திய நாட்டின் தேசிய கீதத்தை பாடி அசத்தியிருந்தனர். இது, இந்தியா அளவில் அதிகம் பிரபலமானது.

அதே போல், பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானதை அடுத்து, அவருக்கு அவரது பாடல்களை பாடி இவர்கள் மரியாதை செய்னதர். இதுவும், இந்தியாவல் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனை கவனித்த பிரதமர் நரேந்திர மோடி, கிலி பாலுக்கு “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் கிலி பாலுவை வெகுவாக பாராட்டு இந்தியா சார்பில் தனது வாழ்த்துக்களையும் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில் தான், அந்நாட்டில் கிலி பாலை 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொண்ட கும்பல் கொன்று, நள்ளிரவு நேரத்தில் மிக கடுமையாக தாக்கி உள்ளனர். 

இது தொடர்பாக, கிலி பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில். “என்னை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கினர். அப்போது, நான் என்னை பாதுகாக்க கைகளால் தடுக்க முற்பட்டேன். அப்போது, எனது உள்ளங்கையில் அஇவர்கள் கத்தியால் குத்தி கிழித்தனர்” என்று, வேதனையோடு பதிவு செய்து உள்ளார்.

மேலும், “இந்த தாக்குதலில், எனது கையில் 5 தையல்கள் போடப்பட்டு உள்ளன என்றும், அவைத் தவிர என்னை அந்த கும்பல் கட்டைகளை கொண்டும் தாக்கினார்கள் என்றும், ஆனாலும் நல்ல வேளையாக கடவுள் அருளால் இருவரை அடித்து நான் என்னை உயிருடன் தற்காத்து கொண்டேன்” என்றும், பதிவிட்டு உள்ளார்.

மேலும், “நான் தாக்கியதால், அந்த இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள் என்றும், அதற்கு முன்னே எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்றும், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள், எனக்கு தற்போது மிகவும் அச்சமாக இருக்கிறது” என்றும், அவர் கவலையுடன் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம், உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.