எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனா தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் தாக்கிய போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதனால் சீனா மீது கடும்கோபத்தில் இருந்தது இந்திய ராணுவம்.


சென்ற ஆண்டை காட்டிலும்  13 சதவீதம் குறைவாக ரூ.4.36 லட்சம் கோடிக்கு இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது சீனா. அதேசமயம் சீனாவுக்கு இந்தியா ரூ.1.40 லட்சம் கோடிக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும். 


இந்நிலையில் இந்தியா-சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம் தொடர்பான புள்ளிவிவரத்தை சீன சுங்கத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான முதல் 11 மாதங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் சுமார் ரூ.5.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதன்படி 11 மாதங்களில் இந்தியாவுக்கான சரக்குகள் ஏற்றுமதி 13 சதவீதம் வீழ்ச்சியும்  சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


இதனால் வரும் காலங்களில் சீனாவிலிருந்து சரக்குகள் இறக்குமதி செய்வதை இந்திய நிறுவனங்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.