2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், இந்தியா 144 வது இடம் பிடித்திருப்பது இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மனிதன் வாழ இந்த பிரபஞ்சமே பரவி விரிந்து கிடக்கிறது. ஆனால், “மனிதன், எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது?” என்ற ஒற்றை கேள்வியில் தான், அவனது ஒட்டுமொத்த சந்தோசமும் அடங்கியிருக்கிறது.

அந்த வகையில், கடந்து சென்ற 2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் “ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க்” என்கிற அமைப்பு, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன் படி, கடந்து 2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தற்போது வெளியிட்டு உள்ளது.

அந்த பட்டியலில், மொத்தம் 149 நாடுகளில் இடம் பெற்றிருக்கின்றன. அதில், 149 நாடுகளில் வாழும் அந்தந்த நாட்டு மக்களிடம் அவர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள், தனி மனித சுதந்திரம், சமூக ஆதரவு, ஜிடிபி, ஊழல், மக்களின் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு முன் வைக்கப்பட்ட இந்த கேள்விகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இந்த ஆய்வறிக்கையின் படி, 4 வது ஆண்டாகத் தொடர்ந்து இந்த ஆண்டும் பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. 

2 ஆம் இடத்தில், டென்மார்க் நாடு இடம் பெற்று உள்ளன.

3 ஆம் இடத்தில் ஸ்விட்சர்லாந்தும், 4 ஆம் இடத்தில் ஐஸ்லாந்தும், 5 ஆம் இடத்தில் நெதர்லாந்து ஆகிய நாடுகள் வரிசையாக அடுத்தடுத்த இடங்களில் அலங்கரித்து நிற்கின்றன.

குறிப்பாக, உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களை ஐரோப்பிய நாடுகளே ஆக்கிரமித்து இருப்பது தெரிய வந்திருக்கின்றன.

இதில், முதல் 10 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடு அல்லாத ஒரே நாடாக இருப்பது நியூசிலாந்து மட்டுமே, இடம் பிடித்திருக்கின்றன. இதில், கடந்த ஆண்டு 8 ஆம் இடத்திலிருந்த நியூசிலாந்து, தற்போது ஒரு இடம் சரிந்து இந்த முறை 9 வது இடத்துக்குப் பின் தங்கியிருக்கிறது.

இந்த பட்டியலில், ஜெர்மனி கடந்த ஆண்டு 17 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த முறை சற்று முன்னேறி 13 வது இடத்துக்கு வந்திருக்கிறது. அந்த வரிசையில், கடந்த முறை 23 ஆம் இடத்தில் இருந்த பிரான்ஸ், இந்த முறை சற்று முன்னேறி 21 ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றன.

ஆனால், பிரிட்டன் கடந்த முறை 13 வது இடத்திலிருந்து வந்த நிலையில், இந்த முறை 17 வது இடத்துக்குப் பின்தங்கி உள்ளது. 

இதே போலவே, உலக வல்லரசான அமெரிக்காவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு இடம் சரிந்து 18 வது இடத்தில் இருந்து, 19 வது இடத்திற்கு வந்திருக்கின்றன.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளான லெசெதொ, போட்ஸ்வானா, ருவாண்டா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் கடைசி இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன. 

குறிப்பாக, இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. இது மகிழ்ச்சியற்ற நாடாக கருதப்படுகிறது.

மிக முக்கியமாக, பல்வேறு உலக நாடுகள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கும் இந்த பட்டியலில் 3.573 புள்ளிகளுடன் இந்தியா 144 வது இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இதே பட்டியலில் இந்தியா 140 வது இடத்தை பிடித்திருந்தது. அதே போலவே, அதற்கு முந்தைய ஆண்டான 2018 ஆம் ஆண்டில் 133 வது இடத்தை இந்தியா பிடித்திருந்த நிலையில், தற்போது மேலும் மேலும் சரிந்து மிக மோசமான அளவில் 144 வது இடத்தை பிடித்திருப்பது, இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.