வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவியின் கள்ளக் காதல் உறவை போட்டு உடைத்த கணவன் கோபத்தோடு வெளியேறிய நிலையில், அவருடைய மனைவி கெஞ்சி கதறிய படியே, கணவன் பின்னாடியே சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் பகிரப்படும் சில விசயங்கள் தீயாய் பரவி, வைரலாவது உண்டு. அப்படி தான் தற்போது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவியின் கள்ளக் காதல் உறவை போட்டு உடைத்து கணவன் பேசிய வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், “மனைவியின் வளைகாப்பு விழா நிகழ்ச்சிக்காக இரு வீட்டார் சொந்த பந்தங்களும், அந்த வீட்டில் கூடியிருக்கிறார்கள். அப்போது, தம்பதிகள் இருவரும் ஸ்பானிஸ் மொழியில்“ பேசுகின்றனர்.

அதன் படி, பேசத் தொடங்கும் கணவன், தன் பக்கத்தில் இருக்கும் நபரை குறிப்பிட்டு, “இவர் எனது வழக்கறிஞர்” என்று குறிப்பிடுகிறார். ஆனால், அங்கு கூடியிருப்பவர்களுக்கு, இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. “மனைவியின் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில், இவர் ஏன் வழக்கறிஞரை அறிமுகம் செய்கிறார்?” என்று, அனைவரும் குழம்பிப் போகிறார்கள்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “எங்களிடம் ஆவணம் ஒன்று உள்ளது என்றும், நான் ஒரு பையனை எதிர்பார்க்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.

“இங்கே பாருங்கள். என்னிடம் ஒரு கர்ப்ப பரிசோதனை முடிவு உள்ளது. நான் ஒரு அப்பாவாக இருப்பேன் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு இங்கு நடந்த உண்மை பற்றி, என்னைப் பற்றி என்னத் தெரியும்?” என்றும், குதர்க்கமாகப் பேசினார்.

“நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும். என் மனைவி 4 மாதம் கர்ப்பம் இல்லை. அவர், 6 மாத கர்ப்பம். அதற்கான ஆதாரம் தான் இது” என்று கூறி, தான் கையில் வைத்திருந்த ஒரு ஆதாரத்தை அங்கு நின்றவர்களிடம் காட்டுகிறார். 

அதன் படி, “அந்த கவரில், குறிப்பிட்ட ஒரு மருத்துவனையின் பெயர் குறிப்பிடப்பட்டு” இருந்தது.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத வளைகாப்பு விழா கொண்டாடும் அவருடைய மனைவி, தன் கணவனிடம் கெஞ்சுகிறார். ஆனால், தன் மனைவியின் கெஞ்சலை கண்டுகொள்ளாமல், அவரது கணவரும் மேலும் பேசுகிறார். ஆனாலும், தன் கணவனை மேலும் பேச விடாமல், அவர் கெஞ்சிய படியே நிற்கிறார். இதனால், அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைகிறார்கள்.

அப்போது, தன்னுடைய வழக்கறிஞர் யைில் இருக்கும் லேப்டாப்பில் உள்ள ஒரு வீடியோவை அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் காட்டுகிறார். அந்த வீடியோவில், “வளைகாப்பு விழா கொண்டாடும் அவருடைய மனைவி, அந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மற்றொரு நபரும் ஒன்றாக உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை அனைவரும் பார்க்கிறார். மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த நபரையும், அந்த கணவர் அங்கிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இதன் பிறகு, மீண்டும் பேசத் தொடங்கும் அந்த கணவர், “என் மனைவியின் வயிற்றில் வளர்வது என் குழந்தை இல்லை. இது அவர்கள் இருவருக்கும் உருவான குழந்தை” என்று சொல்லி கண் கலங்குகிறார்.

இதனைக் கேட்டு அனைவரும் கடும் அதிர்ச்சியடைகிறார்கள். அத்துடன், அங்கு இருந்த அவருடைய மனைவியின் தந்தை, தன் மகளிடம், “உன் கணவர் என்ன சொல்கிறார்?” என்று கேட்கிறார். அதற்கு, அந்த பெண், “என் கணவர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார் அப்பா” என்று பதில் அளிக்கிறார்.

இதனையடுத்து, அங்கிருந்து கண்ணீர் வடித்தபடியே, அந்த கணவர் வெளியேறுகிறார். ஆனால், அவருடைய மனைவி, தன் கணவன் பின்னாடியே கெஞ்சிய படியே ஓடுகிறார். 

அதே நேரத்தில், அந்த பெண்ணின் ஆபாச வீடியோவைப் பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள், அந்த பெண்ணை வழி மறித்து, அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்குகின்றனர். இப்படியாக, அந்த வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது, பெரும்பாலானவர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரும், தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.