எகிப்தின் புதைக்களஞ்சியமான தபோசிரிஸ் மாக்னாவில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரணத்திற்கு பிறக்கான வாழ்க்கை குறித்த அவர்களது நம்பிக்கைக்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. 


காத்லீன் மார்டினீஸ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில், மாக்னாவில் வெட்டப்பட்ட பாறையில் அமைக்கப்பட்ட 16 கல்லறைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லறைகளில் தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றை கண்டுபிடித்தனர். அது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி.


இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில், கிரேக்க கலாச்சரம் இருந்து வந்தது. மரணத்திற்கு பிறகு இருக்கும் வாழ்க்கை குறித்த அவர்களின் நம்பிக்கையை ஒசிரிஸ் என்று குறிப்பிடுகிறார்கள் ஆய்வார்கள். தங்க நாக்குடன் புதைத்தால், இறந்த பிறகு அவர்களுடன் பேச முடியும் என்று நம்பிக்கையினால் இவ்வாறு செய்துயிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 


மேலும் இந்த பகுதியில் கிளியோப்பாட்ரா VII வின் முகம் பொறிக்கப்பட்ட நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். கிளியோப்பாட்ரா காலத்தில் தான் இறந்தவர்களை வெட்டப்பட்ட பாறைகளில் புகைக்கும் வழக்கம் அதிகமாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.