சுமார் 2000 பெண் விமானிகளையும் , விமான பணிப்பெண்களையும் பணியமர்த்த உள்ளதாக GO AIR நிறுவனம் அறிவித்துள்ளது. 


இந்திய விமான நிறுவனமான  கோ ஏர் , எரிபொருள் கட்டணத்தைக் குறைக்க, இதுவரை எந்த விமான நிறுவனமும் செய்யாத ஒரு வழியை அதிரடியாக அறிவித்திருக்கிறது. 
அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் 80 விமானங்களைச் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கும் கோ ஏர் நிறுவனம். இதற்கான செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளில் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில், தற்போது எரிபொருள் கட்டணத்தில் பணத்தை மிச்சப்படுத்த, பெண் விமானிகளையும், விமான பணிப்பெண்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.


இதற்கு காரணம் , ’’ஆண்களை விட பெண்கள்.. ஒவ்வொரு கிலோ உடல் எடைக்குச் சராசரியாக 33LB முதல் 44LB வரை குறைவாக இருப்பார்கள். இதனால் பெண் குழுவினரை மட்டும் விமானம் சுமந்து சென்றால்,  ஆண்டுக்கு 30 மில்லியன் ரூபாய் மிச்சப்படுத்த முடியும். ஏனென்றால், ஒரு வணிக விமானம் கொண்டு செல்லும் ஒவ்வொரு கூடுதல் கிலோ கிராமுக்கும் கூடுதலாக ரூ .3 செலவாகும்.

இந்த செலவை குறைப்பதற்குத் தான் 2000 பெண்களை பணியில் அமர்ந்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவால், விமானத்தில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆண் விமான ஊழியர்கள்  பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் ஆனால் எதிர்காலத்தில் ஊழியர்கள் நியமனங்கள் அனைத்தும் பெண்களாகவே இருப்பார்கள் என்றும்‘’ கோ ஏர் நிறுவனம் கூறியுள்ளது.