மகள் என்று கூட பார்க்காமல் மகளை ஓட ஓட விரட்டி கொடூர கொலை செய்த தந்தை, ஆணவக் கொலையின் உச்சமாக மகளின் சடலம் முன்பு டீ குடித்து சிகரெட் பிடித்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் நாகரிகம் வளர்ந்தாலும், இன்னும் கவுர கொலைகள் மட்டும் மறையவே வில்லை என்பதற்கு, ஜோர்டானில் நடந்த இந்த கொடூர சம்பவமே சாட்சி கூறுகிறது.

ஜோர்டான் நாட்டில் சுமார் 30 வயது மதிக்கத் தக்க அஹ்லம் என்ற பெண், அவரது குடும்பத்தாராலேயே கடுமையான அடக்கு முறைக்கு ஆளாகி உள்ளார்.

குறிப்பாக, அந்த இளம் பெண் கடந்த பல ஆண்டுகளாகவே, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, அந்த பெண்ணின் தந்தையாலும், அந்த பெண்ணின் சகோதரர்களாலுமே பல வித துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தந்தை மற்றும் சகோதரர்களின் துஷ்பிரயோகத்தைப் பொருத்துப் பொருத்துப் பார்த்த அந்த இளம் பெண், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், வீட்டிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிகிறது. 

ஆனால், பின்னாடியே அந்த பெண்ணின் தந்தை அவரை துரத்திக்கொண்டு ஓடி வந்துள்ளார். அந்த பெண்ணும், கையில் உயிரைப் பிடித்துக்கொண்டு, “என்னைக் காப்பாற்றுங்கள்.. என்னைக் காப்பாற்றுங்கள்..” என்று கத்தி கூச்சலிட்டுக்கொண்டே ஓடி வந்திருக்கிறார்.

அந்த இளம் பெண்ணின் சத்தம் கேட்டு, அந்த தெருவே கூடி நின்றும், தங்கள் வீட்டின் மாடியில் நின்றும் மட்டுமே வேடிக்கை பார்த்துள்ளது. ஆனால், உதவி செய்ய ஒருவரும் முன்வரவில்லை. 

மேலும், தன்னை தந்தையிடமிருந்து காப்பாற்றும் படி, அவர் தாயாரிடம் அந்த இளம் பெண் கெஞ்சி உள்ளார். ஆனால், அவரும் எந்த பதில் சொல்லாமலும், சிலையாக அங்கேயே வேடிக்கை பார்ப்பது போல் நின்றுள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த பெண்ணை துரத்திப் பிடித்த அவரது தந்தை, தான் கையுடன் கொண்டு வந்த சிமெண்ட் கட்டையால் தலையில் ஓங்கி பலமாகத் தாக்கி உள்ளார். இதில், அந்த பெண் சுருண்டு அங்கியே மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தன் ஆத்திரம் தீரும் வரை, அந்த தந்தை தன் மகளைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். முக்கியமாக, “அந்த பெண்ணின் உயிர் பிரியும் வரை, தன் மகளை வெறித் தீர அவர் தாக்கியதாக” இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்த பார்த்துள்ளனர். அப்போது, மகளைக் கொலை செய்துவிட்டு, அவர் சடலமாகக் கிடக்கும் அருகிலேயே உள்ள டீ கடையில் டீ யை வாங்கி குடித்துக்கொண்டே, மறு கையில், சிகரெட் புகைத்துக் கொண்டு, தன் மகளின் சடல்தை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.

அதனைப் பார்த்த போலீசார் மற்றும் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, மகளை கொலை செய்த தந்தையைக் கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதற்கிடையில், தன் பெற்ற மகளை தந்தை கொடூரமாகத் தாக்கி கொலை செய்வதை, அங்குக் கூடி நின்றவர்கள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். தற்போது, அந்த வீடியோ ஜோர்டான் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. 

மேலும், இது ஆணவக் கொலை எனவும் கூறப்படும் நிலையில், மகளை கொலை செய்த தந்தைக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே, மகள் என்று கூட பார்க்காமல் மகளை ஓட ஓட விரட்டி கொடூர கொலை செய்த தந்தை, ஆணவக் கொலையின் உச்சமாக மகளின் சடலம் முன்பு டீ குடித்து சிகரெட் பிடித்த சம்பவம், ஜோர்டான் நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.