பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தபோது, ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டதுள்ளது மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் நாட்டில் தான் இப்படியான ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாலியல் உறவுகள் குறித்து, பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. 

அதே நேரத்தில், பாலியல் உறவு தொடர்பான நோய்கள் மற்றும் தொடர்பான பல பிரச்சனைகளையும், இந்த மருத்துவ உலகம் தொடர்ந்து எதிர்கொண்டு தான் வருகிறது.

ஆனாலும், ஒட்டுமொத்த மருத்துவ உலகே ஆச்சரியப்படும் அளவுக்கு, பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த ஒருவரது ஆணுறுப்பு, முறிந்திருப்பது கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், சம்மந்தப்பட்டவரின் ஆணுறுப்பு செங்குத்தாக உடைந்ததால் மருத்துவ உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

அதாவது, இங்காலந்து நாட்டைச் சேர்ந்த 40 வது வயதான நபர் ஒருவர், தனது துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தார். 

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆணுறுப்பு திடீரென்று முறிந்து உடைந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், வலியால் துடிக்கவே, அவரது துணை அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனின் மூலம், அவரது வலத்துப்புறம் 3 சென்டி மீட்டர் தூரத்துக்கு துணிகா அல்புகினியா கிழிந்துள்ளது தெரிய வந்துள்ளதாக” குறிப்பிட்டு உள்ளனர். 

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், “பாலியல் உறவு அல்லது சுய இன்பத்தில் ஈடுபடும் போது, ஆண்களுக்கு சில நேரங்களில் ஆணுறுப்பு கிடைமட்டமாக உடையும் வாய்ப்பு உள்ளது” என்று, குறிப்பிட்டு உள்ளனர். 

அத்துடன், “இது போன்று சில ஆண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஆனால் ஆணுறுப்பு செங்குத்தாக உடைவது மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் முறை” என்றும், கூறியுள்ளனர்.

“எனினும், இது தொடர்பாக சிகிச்சை முடிந்து இன்னும் 6 மாத காலத்துக்குப் பிறகு, அவர் மீண்டும் பாலியல் உறவில் ஈடுபடலாம் என்றும். இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இருந்த அதே அளவு விந்து மீண்டும் எப்போதும் போல் வெளியேற்றம் நடைபெறும்” என்றும், மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், “ஆணுறுப்பை பொறுத்தவரையில், அதில் எலும்புகள் கிடையாது என்றும், ஆண்குறிக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ஆண்குறியின் மையத்தில் இருக்கும் விறைப்புத் திசுவைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பு அடுக்கு வறும்பு மீறிச் செயல்படும் போது முற்றிலுமாக பாதிப்படையும் என்றும், அப்போது, இது போன்று உடையும் நிலை கூட ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்” என்றும், மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

குறிப்பாக, “ஆணுறுப்பில் இருக்கும் துணிகா அல்புகினியா எனும் பகுதி முறிந்து உள்ளது என்றும், இந்த முறிவு ஏற்படும் போது அவரது விந்து வெளியேற்றம் உடனடியாக நின்றிருக்கும் எ்னறும், இந்த முறிவுக்குப் பிறகு அவருடைய ஆணுறுப்பு மெல்லமாக வீங்கவும் தொடங்கி இருக்கிறது” என்றும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மிக முக்கியமாக, “வேண்டுமென்ற ஆணுறுப்பை முறிப்பது ஒரு மரபுச் சடங்காக மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் பின்பற்றப்படுகிறது” என்றும், ஆய்வுகள் உள்ளது 
குறிப்பிடத்தக்கது.