இங்கிலாந்து நாட்டில் ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு விந்தணு தானம் கொடுத்த நபருக்கு, குழந்தையை பார்க்க அனுமதி இல்லை என்று, அந்நாட்டு நீதிமன்றம் 
தெரிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அதாவது, ஆண்களுக்கு ஆண் துணையும், பெண்களுக்கு பெண் 
துணையும் வாழ்க்கைத் துணையாக இருந்து செக்ஸ் முதல் அனைத்து விதமான தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

அப்படி ஒரு பெண் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் இங்கிலாந்தில் இருந்து வந்தனர். அந்த ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற ஆசை இருந்தது. ஆனால், குழந்தைக்காக எந்த ஆணையும் தேடிச் செல்ல அவர்கள் விரும்ப வில்லை.

இதனால், அந்த 2 பெண்களில் ஒருவர் விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். இதற்கு, அவரின் பாட்னரான மற்றொரு பெண்ணும் 
சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனிடம் செயற்கை கருவூட்டல் முறையில் விந்தணு தானம் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். ஆனால், குழந்தை பிறந்த அடுத்த சில மாதங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்த இரண்டு பெண்களும் பிரிந்து விட்டனர்.

இதன் காரணமாக, குழந்தைப் பெற்றுக்கொண்ட பெண் மட்டும், தனது குழந்தையை வளர்த்து வந்தார். குழந்தைப் பிறந்த சில ஆண்டுகள் ஆன நிலையில், விந்தணு தானம் கொடுத்த அந்த நபர், செயற்கை கருவூட்டல் முறையில் பிறந்த குழந்தை பார்க்க வந்துள்ளார்.

அப்போது, ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்த இரண்டு பெண்களும் பிரிந்து விட்டதால், குழந்தை பெற்றுக்கொண்ட பெண் மட்டும் தனியாக இருந்ததால், குழந்தையை பார்க்க வருவதில் எதுவும் சூழ்ச்சி இருக்குமோ என்ற பயத்தில், குழந்தையை பார்க்க அவரை அனுமதிக்க வில்லை.

இதனால், கோபம் அடைந்த அந்த நபர், அந்நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “குழந்தைக்கு 6 வயதாகும் நிலையில், குழந்தையுடன் நேரம் செலவிட விந்தணு தானம் செய்தவருக்கு அனுமதி இல்லை” என்று உத்தரவிட்டார்.

மேலும், “ குழந்தையை சந்திக்க அந்த நபருக்கு அனுமதி அளித்தால், இதன் மூலம் குழந்தையின் வாழ்வில் அவர் அதிக இடம் தேட முயல்வார் என்றும், அது குழந்தையின் எதிர்கால நலனைப் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது” என்றும், நீதிபதி விளக்கம் அளித்தார். 

அதே நேரத்தில், “விந்தணு தானம் செய்த நபர், சிறுமிக்கு கடிதங்களையும் புகைப்படங்களையும் பகிரலாம்” என்றும், அனுமதி அளித்தனர். 

அத்துடன், சிறுமி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்த பின்னர், சிறுமியே அவரை சந்திக்க விரும்பினால் சட்டப்பூர்வமா பெற்றோரான அந்தப் பெண்கள் இருவரும் சிறுமியின் கோரிக்கையை ஏற்று, விந்தணு தானம் செய்த நபரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்கலாம்” என்றும், நீதிபதி கூறினார். இந்த வழக்கு, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.