“என் உயிருக்கே ஆபத்து” இருக்கிறது என்று, குளியலறையில் இருந்து பேசும் துபாய் இளவரசியின் வீடியோவால், அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இளவரசிகளில் ஒருவருமான ஷேகா லதிபா என்ற பெண் இருந்து வருகிறார். 

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், எமிரேட்ஸில் இருந்து அவருடைய நண்பரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான டீனா ஜஹியைனன் என்பவருடன், ஐக்கிய அரபு அமீரக எல்லையை காரில் கடந்து ஓமனுக்கு சென்று இருக்கிறார். 

அதன் பின்னர், அங்கிருந்து இருவரும் கடல் மார்க்கமாகப் படகு ஒன்றில் தப்பித்துச் சென்ற போது, கோவா அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக, இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கே திருப்பி மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆனால், 2 வாரங்களுக்குப் பிறகு, டீனா ஜஹியைனனை மட்டுமே அதிகாரிகள் விடுவித்தனர்.

அதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இளவரசிகளில் ஒருவருமான ஷேகா லதிபா பற்றிய எந்த தகவலும் வெளியே தெரியாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இளவரசிகளில் ஒருவருமான ஷேகா லதிபா, “என் உயிருக்கே ஆபத்து” என்று, குளியலறையில் இருந்து பேசும் வீடியோ வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வீடியோவில் பேசியிருக்கும் ஷேகா லதிபா, “நான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்பதை முதலில் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “நான் இங்கிருந்து விடுதலை பெற விரும்புகிறேன் என்றும், இங்கிருந்து நான் விடுவிக்கப்படும் போது, எப்படி இருப்பேன் என்று எனக்குத் தெரியாது” என்றும், எதையோ குறிப்பிட்டு சூசமாக அதில் பேசியிருக்கிறார்.

குறிப்பாக, “என் உயிருக்கே ஆபத்து இருக்கிறது” என்றும், அந்த வீடியோவில் அந்த இளவரசி தெளிவாகக் கூறியிருக்கிறார்.

இது அனைத்தையும், அவர் பயன்படுத்தும் குளியலறை ஒன்றில் இருந்து எடுத்திருக்கும் நிலையில், இந்த வீடியோ கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு  எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அதற்குக் காரணமாக, இளவரசி ஷேகா லதிபா, சிறையில் அடைக்கப்பட்ட பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டின் போது, டீனாவிற்கு அழைப்பு ஒன்று வந்து உள்ளது. 

அப்போது தான், தான் சந்தித்து வரும் அனைத்து துயரங்களைப் பற்றியும் இளவரசி ஷேகா லதிபா அவரிடம் கூறியதாகத் தெரிகிறது,

இப்படியாக, அவ்வப்போது இது போன்ற அழைப்புகள் அவருக்கு வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த அழைப்புக்கள் தற்போது முற்றிலுமாக நின்று போய் உள்ளது. இதனால், தனது தோழியைக் காப்பாற்றும் நோக்கில், அந்த இளவரசி தன்னுடைய பிரச்சனைகள் குறித்துப் பேசிய வீடியோவை, தற்போது இந்த வெளி உலகத்தின் பார்வைக்காக வெளியிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த வீடியோ வெளியாகி, தற்போது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஐநாவின் கவனத்திற்குச் செல்லும் என்றும், இந்த பிரச்சனையில் பல உலக நாடுகள் தலையிடும் என்றும், செய்திகள் வெளியாகி வருகின்றன.