அமெரிக்காவின் டென்னிசிஸ் பகுதியை சேர்ந்தவர் பில் டோர்ரிஸ். 84 வயதான இவர் அமெரிக்காவில் சிறந்த தொழில் அதிபர். இறக்கும் வரை பில் டோர்ரிஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரின் சொத்து மதிப்பு இப்போது வரை சுமார் 5 மில்லியன் டாலர். இவரது சொத்துகள் மற்றும் முதலீடுகள் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.


வாழும் காலத்தில் யாரையும் பில் டோர்ரிஸ் தத்தெடுக்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளாமல் வாழ்ந்துள்ளார். அவருக்கு இருந்த ஒரே சொந்தம் அவர் வளர்த்த நாய் மட்டும் தான். அதனால் அளவுகடந்த பாசத்துடன் அந்த நாயுடன் வாழ்ந்து வந்துள்ளார்.


Border Collie என்ற இனத்தை சேர்ந்தது தான் அந்த நாய். அதன் பெயர் லுலு. ஒரு நிமிடம் கூட அந்த லுலுவை பிரிந்து இருக்கமாட்டார். வேலையை தவிர்த்து அதிக நேரம் லுலுவுடனே செலவழிப்பார் பில் டோர்ரிஸ். 

bill
கடந்த ஆண்டு, பில் டோர்ரிஸ் இறந்துவிட்டார். தன் காலத்துக்கு பிறகு லுலு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக , தனது 5 மில்லியன் சொத்துக்களை லுலுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். லுலுவை கவனித்துக்கொள்ள ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். அந்த பில் டோர்ரிஸ் பணத்தில் அறக்கட்டளை மூலம் லுலுவுக்கு தேவையானதை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இந்த செய்தியை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் பலர் பொறாமைப்பட்டு வருவதாக விவாதித்து வருகிறார்கள்.