நடிகை தீபிகா படுகோனேவின் நண்பனின் மகனை தாயே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடம்பர வீட்டின் பிரம்மாண்ட படுக்கை அறையில் நடந்த சோகம் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை தற்போது பார்க்கலாம். 

இந்தியாவில் பிரபலமான நடிகையான தீபிகா படுகோனே புகழ் பெற்றுத் திகழ்கிறார். நடிகை தீபிகா படுகோனேவின் நண்பரும், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞருமான Dean Freeman னின் குழந்தையைத் தான், அவரது மனைவி கொலை செய்திருக்கிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் Dean Freeman -  Olga Freeman தம்பதிகளுக்குக் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, இந்த தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, Dean Freeman -  Olga Freeman தம்பதிகளுக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவரும் கடந்த பல வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துள்ளனர். இதனால், Dean Freeman னின் மனைவி Olga Freeman, தனது மகன் Dylan Freeman உடன் தனியாக வசித்து வந்தார். தற்போது, அந்த மகனுக்கு 10 வயது ஆகிக்கொண்டு இருந்தது. 

சுமார் 5 லட்சத்து 44 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புடைய அந்த ஆடம்பர பங்களா வீட்டின் பிரம்மாண்ட படுக்கை அறையில், தான் அந்த சிறுவன் தூங்குவது வழக்கம். மகன் மிது அளவில்லா அன்பு வைத்திருந்த அவரது தாயார், மகனுக்குப் பிடித்த எல்லா விதமான பொம்மைகளையும், அந்த வீட்டில் வாங்கி வந்து கொடுத்து, தனது மகனின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டு இருந்தார். இவ்வளவு அன்பு வைத்திருந்த தாய் ஏன் தன் மகனைக் கொன்றார்? என்ற கேள்விதான் எல்லோரும் எழுந்தது.

அதாவது, மகன் Dylan Freeman க்கு, சிறு வயது முதலே கடுமையான ஆட்டிசக் குறைபாடு இருந்துள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவன் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். அத்துடன், கூடுதலாக cohen syndrome என்கிற மற்றும் ஒரு மரபணு குறைபாடும் சிறுவன் Dylan Freeman க்கு இருந்து உள்ளது. 

இந்த நோய் குறைபாடு காரணமாக, அந்த சிறுவன் தனக்குத் தோன்றுவதை வெளிப்படுத்திப் பேசத் தெரியாத சிறுவனாக இருந்து உள்ளான். சிறுவன் வீட்டிலேயே வளர்ந்து வந்ததால், அந்த சிறுவன் வளர வளர அவனுக்கு முரட்டுத் தனமும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது.

இதனால், அந்த சிறுவனை கவனித்துக் கொள்வதற்காக 25 வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞரை, அவரது தாயார் நியமித்துள்ளார். ஆனாலும், அந்த 
இளைஞரால் அந்த சிறுவனை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் கவனித்துக் கொள்ள முடியாமல் போனது. அவர் சில நாட்களிலேயே வேலையை விட்டு நின்று உள்ளார். இதனையடுத்து, சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் அந்த சிறுவன் சேர்க்கப்பட்டான். 

அதன் தொடர்ச்சியாக அந்த நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால், Dylan Freeman ஒரு மாதமாகப் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், Olga Freeman வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் மகனைப் பார்த்துக்கொள்வதற்காக, வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல், மகனைக் கவனித்துக்கொள்ள மிகவும் அவரது தாய் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக, மகனை கவனித்துக் கொள்வது தொடர்பாக உள்ளூர் கவுன்சில் உதவியை அவரது தாயார் நாடி உள்ளார். ஆனால், அவர்கள் தரப்பில் எந்த உதவியும் கிடைக்க வில்லை. 

இதனால், மகனைப் பார்த்துக்கொள்ளத் தனி ஆளாகப் போராடி அந்த தாய், ஒரு கட்டத்திற்கு மேல் பார்த்துக்கொள்ள முடியாமல், பெற்ற மகனையே அவர் கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, தாய் Olga Freeman அந்நாட்டின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மகனை எப்படி கொலை செய்தேன் என்றும் கூறியிருக்கிறார். அதாவது, அவர் அளித்த வாக்கு மூலத்தில், “சிறுவனது வாய்க்கு ஸ்பாஞ்ச் போன்ற ஒன்றையும் திணித்து மகனின் மூச்சை நிறுத்தியதாகவும், இதனால் தன் மகன் உயிரிழந்து விட்டதாகவும்” அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, பெற்ற மகனை தாயே கொலை செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.