பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4 வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. 

சீனாவில் உருவானதாக கூறப்படும் கொரோனா என்னும் கொடிய வைரஸ், இன்று உலகம் முழுக்க பரவி, அது தற்போது 2 வது அலை, 3 வது அலை என்று மீண்டும் மீண்டும் புதிய புதிய வடிவம் எடுத்து பரவிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோயால், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மனித குலத்துக்கு மாபெரும் ஒரு அச்சுறுத்தலாக தற்போது மாறி
இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் தான், மற்ற உலக நாடுகளை காட்டிலும், பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 3 அலைகளாக உருமாறி கொரோனா வைரஸ், பல லட்சம் உயிர்களை பழி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பிரலான்ஸ் நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் கொரோனா, தனது கோர முகமான 4 வது அலையாக உருவெடுக்கும் என்று, அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சியான தகவலை தற்போது வெளியிட்டு உள்ளார்.

பிரான்ஸ் நாட்டை பொறுத்த வரையில், கடந்த சில வாரங்களாக டெல்டா பிளஸ் எனப்படும் கொரோனா வைரஸ், அந்நாட்டில் மிக வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. 

“இந்த நோய் பரவலானது, அந்நாட்டில் 4 வது அலைக்கு அப்படியே வித்திடும் என்றும், இந்த 4 வது கொரோனா பரவலானது, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத கால கட்டங்களில் தான் பரவத் தொடங்கும்” என்றும், அறிவியல் ஆலோசகரும்,  பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்து உள்ளார். 

முக்கியமாக, “அந்த தருணத்தில், இந்த 4 வது அலையின் வீரியம், மிக அதிகமாக இருக்கும்” என்றும், ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, “பிரான்ஸ் நாட்டில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், அதே நேரத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை இன்னம் தீவிரபடுத்த வேண்டும்” என்றும், பேராசிரியர் ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி வலியுறுத்தி உள்ளார். 

அதே போல், பக்கத்து நாடான பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 48,878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 2,127 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

குறிப்பாக, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அங்கு அதிகரித்து வருகிறது. 

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 42 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நாட்டில், இது வரை  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,514,599 ஆக உயர்ந்திருக்கிறது.

எனினும், “ரஷ்யாவில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், நாடு தழுவிய ஊரடங்கு தேவைப்படாது” என்றும், அந்நாட்டின்
அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.