உருமாறிப் போன கொரோனா வைரசால் ஆண்களையும், தம்பதிகளையும் கதிகலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ், இந்த உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அது, தற்போது உருமாறிப் போய், கொரோனா தொற்று ஆண்களுக்கு வாரிசு பாக்கியத்தை கேள்வி குறியாக்கி உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பரத் தொடங்கிய புதிதில், கொரோனா பீதியால், உடலுறவில் ஈடுபடலாமா? என்ற அச்சமும், கேள்வியும் அனைவருக்கும் எழுந்துள்ளது.

இதனால், கொரோனா பீதியால், உலகம் முழுமைக்கும் கை கொடுத்து, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் மேல்நாட்டுக் கலாச்சார பழக்கம் மறைந்து, மனிதர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக, கணவன் - மனைவி அதிக நேரம் அருகில் அருகில், நெருக்கமா இருக்கும் சூழல் ஏற்பட்டது. 

சுத்தம், உணர்வு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் மனிதனுக்கு விதித்தாலும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியுமா? என்று கேள்வி எழுந்தது. “கொரோனா காலத்தில், மனிதன் உடலுறவில் ஈடுபடலாமா?” என்ற பெரும் கேள்விதான், கொரோனா பரவத் தொடங்கிய புதிதில் எல்லோருக்குள்ளும் எழுந்துள்ளது. இதனால், கொரோனா பரவத் தொடங்கியது முதல், கடந்த பல மாதங்கள் இதுபற்றிதான், வெளிநாட்டு ஊடகங்கள் விவாதித்தன.

அதன் தொடர்ச்சியாக, “உடல் சார்ந்து தாம்பத்திய உடலுறவைக் கட்டுப்படுத்துவது அவசியம்” என்றே கூறப்பட்டது. 

“கொரோனா வைரஸ், எச்சில் மூலம் பரவும் என்றால், உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதாலும் பரவும்” என்றும் கூறப்பட்டது. 

இதனால், உடல் நலனின் அக்கரைக்கொண்டு, காதலர்கள் சந்திப்புகளைத் தள்ளி வைப்பது நல்லது என்றும், கணவன் - மனைவி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ்.. காதல் வைரசாக மாறியதால், இந்தியாவில் ஆணுறை விற்பனை அப்போது அமோகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. 

அதே நேரத்தில், “அடிக்கடி உடலுறவு கொண்டால், கொரோனா வைரஸ் செத்துவிடும்” என்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி கூறியதும், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தொடக்கத்தில் பல்வேறு பக்க விளைவுகளைக் காட்டி வந்த கொரோனா வைரஸ், தற்போது சற்று உறுமாறி கொரோனாவின் ஒரு பக்க விளைவுகளைக் காட்டி வருவது ஆண்கள் மற்றும் தம்பதிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஜெர்மன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 100 பேரில் 84 பேரின் இனப்பெருக்க வயதில் இருக்கும் ஆண்களின் உயிரணுக்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பது, அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றுடன், உயிரணுக்களின் உருவம் சுமார் 400 சதவீதம் அளவுக்கு மாற்றம் அடைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியாக, பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், தங்களது மனைவியை கருவுறச் செய்வதில் பெரும் சிக்கலாக இருப்பதாகவும், அது பெரும் சவளாக இருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகி உள்ளன. இதனால், புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் மற்றும் வாரிசுகளுக்காகக் காத்திருக்கும் ஆண்கள் மற்றும் தம்பதிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.