ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த கிராம மக்கள் தங்க மலை தோண்டி தங்கம் எடுத்து வந்தனர். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் அந்த கிராம மக்கள் பலர் மலையை தோண்டி தங்கம் எடுத்து, சாக்குகளில் நிரப்பும் காட்சிகள் இடம் பெற்றன. மற்றொரு வீடியோவில் வீட்டுக்குக் கொண்டு வந்து அந்த தங்கத்தைக் கழுவிச் சேகரித்தனர்.


சில எளிய கருவிகள் மூலம் லுகிஹி கிராம மக்கள் மலையை குடைந்து தங்கம் எடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து காங்கோ அரசாங்கம் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது. 


இந்த கிராமத்தில் தங்கத்தை எடுப்பது குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ’ இவ்வாறு தங்கம் எடுக்கப்படுவதால், காங்கோவில் தங்கத்தின் உற்பத்தி குறைவாக மதிப்பிடப்படுகிறது. அண்டை நாடுகளில் உதவியால், உலகளாவிய கடத்தல் சங்கிலி மூலம் இந்த தங்கம் கடத்தப்படுகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை  60கிலோ தங்கம் உற்பத்தியும் 70 கிலோ ஏற்றுமதியும் நடந்து இருக்கிறது. ’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது.