பீச் வாலிபால் போட்டியில் பிகினி உடைக்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடிய பெண்கள் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளது.

பல்கேரியா நாட்டில் நடத்தப்பட்ட போட்டியில் விளையாடி நார்வே நாட்டு பெண்கள் அணிக்கு தான், இப்படி ஒரு மோசமான அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது, புதிய
சர்ச்சைக்கு வித்துட்டுள்ளது.

அதாவது, பல்கேரியா நாட்டில், ஐரோப்பிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில், நார்வே பெண்கள் அணி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டு உற்சாக மாக பீல் வாலிபால் போட்டியில் கலந்துகொண்டு
விளையாடினார்கள்.

ஆனால், இந்த பீச் வாலிபால் போட்டியில், நார்வே பெண்கள் அணியானது, டாப்ஸ் மற்றும் பிகினி கீழாடை அணிவதற்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடி
உள்ளனர். 

இந்த செயல்பாடு, ஐரோப்பிய பீச் வாலிபால் கமிட்டியில் எதிரொலித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐரோப்பிய பீச் வாலிபால் கமிட்டி, நார்வே நாட்டின்
பெண்கள் பீச் வாலிபால் அணிக்கு 1,500 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இது, இந்திய மதிப்பில் 13.12 லட்சம் ரூபாய் ஆகும். 

இப்படி, நார்வே நாட்டின் பெண்கள் பீச் வாலிபால் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் மிக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. 

அத்துடன், இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலாகி வருவதால், உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து
வருகின்றனர்.

மேலும், இந்த அபராதம் விதிக்கப்பட்டதற்கு நார்வே கைப்பந்து கூட்டமைப்பும் தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்திரக்கிறது. 

இது தொடர்பாக தங்களது ஆதரவை தெரிவிதுள்ள நார்வே கைப்பந்து கூட்டமைப்பு, “நாங்கள் உங்களுக்கு பின்னால் நின்று உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
ஆடைகளுக்கான விதிகளை மாற்றுவதற்காக ,நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதனால், வீரர்கள் அவர்கள் வசதியாக இருக்கும் ஆடைகளில் விளையாட
முடியும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று, கருத்து தெரிவித்து உள்ளது.

அதே போல், இந்த பிரச்சனை தொடர்பாக அந்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் ஆபிட் ராஜா கூறும்போது, “இது முற்றிலும் அபத்தமானது” என்று, தனது
கண்டனத்தை பதிவு செய்து உள்ளார்.

இதனிடையே, பீச் வாலிபால் போட்டிகளின் விதிகளின் படி, போட்டியில் விளையாடும் பெண்கள், டாப்ஸ் மற்றும் பிகினி கீழாடை அணிய வேண்டும் என்பது விதியாக
உள்ளது. அதே போல், ஆண்கள் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸை அணிய வேண்டும் என்பதும், அந்நாட்டின் தற்போது விதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.