முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில்  உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார்.  முதலவர் ஆனபிறகு மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முதல் பயணம் இது.  4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். இந்நிலையில் அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை துபாய் அரசு வழங்கியுள்ளது. 

துபாயில்  உலக கண்காட்சிகள், மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, 6 மாத காலங்களுக்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்கி வருகிற 31-ம் தேதி வரை நடந்து வருகிறது. மேலும் இந்த உலக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ம் தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.  இந்தநிலையில்,  4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று  திறந்து வைக்கிறார். 

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவர் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட  பிஎம்டபிள்யூ காரை துபாய் அரசு வழங்கி பெருமைப்பட வைத்துள்ளது.