“5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறை!” சர்ச்சைக்கு வித்திட்ட புதிய கல்வி கொள்கை
“பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கப்படும்” என்று, வெளியான புதிய கல்வி கொள்கையின் அறிவிப்பால் மிகப் பெரிய சர்ச்சை வெடித்து உள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் தான் இப்படி சர்ச்சையை ஏற்படுத்திக்கூடிய புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் சிகாகோவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அங்கு மூடப்பட்டிருந்த பள்ளிகள் அடுத்த மாதம் முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதனால், அந்நாட்டில் உள்ள பள்ளிகளைத் திறக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன், அடுத்த மாதம் முதல் திறக்கப்படும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஃபேஸ்மாஸ்க், சானிடைசர், தெர்மா மீட்டர்கள் வழங்கப்படும் என ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் வரிசையாக அறிவித்து வருகின்றன.
மேலும், சிகாகோவில் கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் படி, “பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கப்படும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, சிகாகோ பள்ளி கல்வித் துறையானது, “பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும்” என்று, கடந்த ஆண்டு புதிய கொள்கையை விதிமுறைகளில் புதிதாகச் சேர்ந்தது.
சிகாகோ பள்ளி கல்வித் துறையானது, “பாலியல் கல்வியின் ஒரு பகுதியாக” பார்க்கப்படுகிறது.
மேலும், எச்.ஐ.வி தொற்று மற்றும் மாணவர்களிடையே எதிர்பாராத கர்ப்பம் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காகவும், பாலியல் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் விதமாகவும், சிகாகோ பொது சுகாதாரத்துறையால் ஆணுறைகள் வழங்கப்பட்டு” வருகின்றன.
இந்த அறிவிப்புக்குப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்ந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அந்நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், “பாலியல் கல்வியை வரவேற்கிறோம் என்றும், இது ஒன்றும் பிரச்சினையில்லை” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
“ஆனால், 5 வது படிக்கும் சிறுவனுக்கு ஆணுறைகள் எதற்கு? என்று தான் நாங்கள் கேட்கிறோம்” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“5 வது படிக்கும் சிறுவனுக்கு என்ன ஒரு 10, 11 வயது இருக்குமா? என்றும், அந்த சிறுவர்களுக்கு ஆணுறைகள் எதற்கு? என்றும், இதன் மூலம் நீங்க என்ன சொல்லிக்கொடுக்க விரும்புகிறீர்கள்?” என்றும், அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
“5 வது படிக்கும் சிறுவனுக்கு ஆணுறை கொடுப்பது எல்லாம் கேலிக்கூத்தானது” என்றும், தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்து உள்ளனர்.
மேலும், “வளரும் இளம் பருவத்தினருக்கு மிகச் சரியான ஆலோசனையும், கல்வியும் தேவை தான என்று கூறி, இந்த அறிவிப்பைச் சிலர் வரவேற்கவும் செய்கின்றனர்” என்றும், அவர் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். இது போல், பலரும் தங்களது எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.