“தம்பதிகளே.. தாம்பத்தியத்தில் ஈடுபட போறீங்களா? அப்படினா, இதை ஃபாலோ பண்ணுங்க” என்று, கனடா சுகாதார அதிகாரி அட்வைஸ் கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பீதியால், “தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாமா?” என்ற சந்தேகமும், அச்சமும் எல்லோரிடத்திலும் எழுந்து உள்ளது. 

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகம் முழுமைக்கும் பெரும்பாலும் கை கொடுத்து, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் மேல் நாட்டு கலாச்சாரம் எல்லாம், மறைந்து மனிதர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, “வணக்கம்” சொல்லும் தமிழ்நாட்டு கலாச்சாரம் உட்புகுந்து கொண்டுள்ளது.

அதே நேரத்தில், கொரோனா அச்சுறுத்தல் சூழல் நிலவி வரும் வேளையில், தம்பதிகள் அனைவரும் பாதுகாப்பான தாம்பத்திய வாழ்க்கைக்கு சில விசயங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று, வெளிநாட்டு மருத்துவர்கள் கொரோனா பரவத் தொடங்கி அடுத்து சில நாட்களிலேயே அறிவுறுத்தி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, “தம்பதிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் பாதுகாப்பாக தங்களது துணையுடன் இணைய வேண்டும்” என்று, வெளிநாட்டு மருத்துவர்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர்.

அதன்படி, “தாம்பத்தியத்தில் முத்தம் மட்டுமே போதும் என்றும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கணவன் - மனைவிக்குள் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்” என்றும், வெளிநாட்டு மருத்துவர்கள் வற்புறுத்தி வந்தனர். 

முக்கியமாக, “வெளியே சென்று யாரும், வெளியாட்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், உங்கள் துணைக்கு உடல் நிலை சரியில்லை என்றால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும்” என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரசின் 2வது அலையானது ஐரோப்பிய நாடுகளில் பரவித் தொடங்கி உள்ளதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கனடாவின் தலைமை பொதுச் சுகாதார அதிகாரியும், உயர் மருத்துவருமான theresa tam கடந்த 2 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “தம்பதிகள் உடல் அளவில் உறவு கொள்ள நெருக்கமாக இருக்கும் போதும், முத்தம் கொடுக்கும் போதும், நேருக்கு நேர் நெருங்கும் பொழுதும் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வகையில், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “தம்பதிகள் முடிந்த வரை முத்தம் கொடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதே நலம்” என்றும், அவர் வற்புறுத்தி உள்ளார்.

முக்கியமாக, “எந்த தாம்பத்தியம் தொடர்பான எந்த ஒரு பாலியல் ரீதியான செயலுக்கும் முன்பு, சம்மந்தப்பட்ட தம்பதிகள் தங்களுக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் சார்ந்த அறிகுறிகள் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதனால், கனடாவின் தலைமை பொதுச் சுகாதார அதிகாரியின் அந்த அறிவிப்பு, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.