சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு பல்கேரியா நாட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வடக்கு மாசிடோனியா நாட்டில் இருந்து ஒரு சுற்றுலா பேருந்து, துருக்கியிலிருந்து பல்கேரியா வழியாக நாடு திரும்பிக்கொண்டு இருந்தது.

அப்போது, சுற்றுலா பேருந்தில் வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்தச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மொத்தம் 52 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.

அதன் படி இரவு முழுவதும் பயணமான இந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணி அளவில், அந்நாட்டின் தலைநகர் சோபியாவின் தென் மேற்கில் அமைந்திருக்கும் போஸ்னெக் கிராமம் வழியாக சென்றபோது, திடீரென்று விபத்திக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய அந்த பேருந்து, அப்படியே தீ பற்றி எரிந்து உள்ளது. பேருந்து தீ பற்றிய போது, அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

இதனால், எந்த பயணியாலும் அவ்வளவு எளிதாகக் கண் விழிக்க முடியவில்லை. அப்போது, தீ பற்றிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீ பற்றிய தொடங்கிய நிலையில், தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் கண் விழித்து அலறியடித்து துடித்து உள்ளனர். இதனால், பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேர், அப்படியே தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

அத்துடன், இந்த பேருந்திலிருந்து 7 பேர் மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பி, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் அந்நாட்டு மீடியாக்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வீடியோவில், சாலையில் பேருந்து கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. 

இது தொடர்பாக அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்ட பல்கேரிய அதிகாரிகள் பேசும் போது, “பேருந்து தீப்பிடித்ததால் விபத்துக்குள்ளானதா அல்லது விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், இது தொடர்பாக வழக்குப் பதிவ செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றும், கூறினார்.

குறிப்பாக, “இந்த விபத்தில் உயிர் தப்பிய 7 போரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும்” போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து, அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.