பிரபல மாடல் அழகி கிரிஸ் கேலரா, தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட நிகழ்வு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மாடல் அழகி கிரிஸ் கேலரா தான், தன்னை தானே கல்யாணம் செய்துகொண்டு இருக்கிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகியான 33 வயதான கிரிஸ் கேலரா, மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவரது கடந்த காலங்கள், பேசும் பொருளாக மாறிப்போனது.

மாடல் அழகி கிரிஸ் கேலராவின் கடந்த கால உறவு முறைகள், கருத்து வேறுபாட்டால் முறிந்து முடிவுக்கும் வந்தது. இதனால், கடந்த சில மாதங்களாகத் தனிமையில் தவித்து அவர், பொது விசயங்களில் தலைகாட்டாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார் என்றே கூறப்பட்டது.

மனதளவில் பெரும் பாதிக்கப்பட்ட மாடல் அழகி கிரிஸ் கேலரா, இத்தனை நாட்கள் மேற்கொண்டு வந்த தன்னுடைய தனிமைக்கு அவர் முடிவு கட்டி உள்ளார்.

இந்த நிலையில் தான், இது வரை தனியாக வாழ நினைத்த மாடல் அழகி கிரிஸ் கேலரா, பிரேசில் நாட்டில் இருக்கும் பிரபலமான ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னைத் தானே தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். 

கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், மாடல் அழகி கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

தன்னை தானே திருமணம் செய்துகொண்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்து உள்ள மாடல் அழகி கிரிஸ் கேலரா, “எனது வாழ்க்கையில் நான் தனியாக இருக்கப் பயப்படுவேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், இப்போது தான் நான் தனியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றும், பெருமிதத்தோடு கூறியுள்ளார். 

“அதனால் தான் நான் என்னையே திருமணம் செய்துகொண்டேன் என்றும், இந்த தனிமையான உணர்வு மிகவும் அற்புதமாக எனக்கு இருக்கிறது” என்றும், அவர் பூரித்துப்போய் பேசி உள்ளார்.

ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு என்பது, தற்போது ஒன்றும் புதிதாக நடைபெறும் விசயமில்லை. இதற்கு முன்னதாக, இதே போன்று கடந்த ஆண்டு “பட்ரிசியா கிறிஸ்டின்” என்ற இளம் பெண், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரபல மாடல் அழகியான 33 வயதான கிரிஸ் கேலரா, தன்னை தானே திருமணம் செய்துகொண்டது, உலக அளவில் வைரலாகி வருகிறது.