“2022 ஆம் ஆண்டு மக்களை புதுவிதமான வைரஸ் தாக்கும்!” அதிர்ச்சியை கிளப்பும் பாபா வங்கா பாட்டி..
“வரும் 2022 ஆம் ஆண்டு மக்களை இன்னும் புதுவிதமான வைரஸ் தாக்கும்” என்று, பாபா வங்கா பாட்டி, அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.
உலகில் சிலருக்கு அபூர்வமான சக்தி இருப்பதை சில தருணங்களில் பலரும் உணர்ந்திருக்கலாம்.
அந்த வகையில், “எதிர் காலத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பது முன்கூட்டியே சிலருக்கு மட்டும் தெரியும் என்றும், சிலருக்கே அது புரியும்” என்றும், கூறப்படுவதுண்டு.
இது போன்ற சம்பவங்களை எல்லாம் நாம் அதிகமாக சினிமாவில் பார்ப்பதுண்டு. ஆனால், அப்படி எதிர் காலத்தில் நடப்பதை நிகழ்காலத்தைக் கணித்துச் சொன்னவர்கள் என்று நாம் வாழும் பொழுதே வாழ்கிறார்கள் என்பது எவ்வளவு ஒரு ஆச்சரியமான விசயம்.
அப்படியான சக்தி மிக்க ஒருவராகவே பாபா வங்கா பாட்டி என்ற பெண்மணி, அறியப்பட்டு வருகிறார்.
அப்படி ஒரு ஆச்சரியமான மனிதர் தான், பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பெண். இவர், நாம் வாழும் இதே காலகட்டத்தில் வாழ்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார்.
தற்போது, அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவர் இருக்கும் போது, இந்த உலகத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கணித்துக் கூறிய விசயங்கள் எல்லாம், ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவது தான் தற்போது உலகிற்கே பெரும் ஆச்சரியமாகவும், பெரும் வியப்பாகவும் உள்ளது.
அதாவது, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி, கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் உயிரிழந்தார்.
பாபா வங்கா, தனது 12 வயது வரை மிகவும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்த நிலையில், அதன் பிறகுத் தனது பார்வை திறனில் குறைபாடு ஏற்பட்டு முற்றிலுமாக பார்வையை இழந்தார்.
இவர், இறப்பதற்கு முன்பே இந்த உலகில் நாளை வர இருக்கும் எதிர் காலம் குறித்த பல தகவல்களையும், அவர் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதுவும், தனது கண் பார்வை இழந்த பிறகுதான் அவர் இவற்றையெல்லாம் கூறியிருக்கிறார்.
அதுவும், சீனா நாட்டில் பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தொற்று, இன்றைய நாளில் உலக நாடுகளில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பரவி, அது 2 வது அலையும் வீசிவிட்டு, தற்போது புதிய வகை கொரோனா வைரஸ்களாகவும் அவை உருமாற்றம் அடைந்துக்கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில்தான், இந்த உலகமே 2022 ஆம் ஆண்டை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தான், இன்னும் சில நாட்களில் “புதிதாக பிறக்க உள்ள 2020 ஆம் ஆண்டு ஆண்டு எப்படி இருக்கும்?” என்று கண் இல்லாத பாட்டியான பாபா வங்கா கணித்து சொல்லியது தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.
அதன்படி, “வரும் ஆண்டில் குடிநீருக்கான பஞ்சம் அதிகரிக்கும் என்றும், ஆறு மற்றும் ஏரி மாதிரியான நீர் நிலைகள் மாசடைந்து வருவது இதற்கு காரணமாக இருக்கும்” என்றும், கணித்து உள்ளார்.
இதற்காக, “உலகின் பெரும்பாலான மக்கள் பலரும் மாற்று வழியில் இதற்கான தீர்வை நோக்கி பயணிப்பார்கள்” என்றும், அவர் முன்கூட்டியே கணித்து உள்ளார்.
மேலும், “வெப்ப நிலையில் காணப்படும் மாற்றத்தால் விவசாய பயிர்களை வெட்டுக் கிளிகள் படையெடுத்து தாக்கக்கூடும்” என்றும், அவர் கணித்து உள்ளார்.
மிக முக்கியமாக, “வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களின் அச்சுறுத்தல் இருக்கும்” என்றும், அந்த பாட்டி பீதியை கிளப்பி இருக்கிறார்.
இவற்றுடன், “பெரும்பாலான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும்” என்றும், அந்த பாட்டி கணித்து கூறியிருக்கிறார்.
குறிப்பாக, “அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையில் குழப்பம் ஏற்படும் என்றும், மக்களை இன்னும் புது விதமான வைரஸ் தாக்கும்” என்றும், கண் தெரியாத பாபா வங்கா பாட்டி அவர் உயிருடன் இருக்கும் போதே கணித்து கூறியுள்ளதாக ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது உலகம் முழுவதும் பெரும் வைரலாகி பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, “அமெரிக்காவை பயங்கரவாதிகள் தாக்குவார்கள்” என்று, அந்த பாட்டிய முன்கூட்டியே கூறிபடி “கடந்த 11.09.2001 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் அமெரிக்கா தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.