இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் கிரிக்கெட் போட்டியின் போது இளைஞர் ஒருவர், தனது காதலிக்குக் காதல் ப்ரபோஸ் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில், நேற்று நடைபெற்ற முதல் இன்னிங்சின் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது, நேற்று நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தின் போது, இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்து ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்தில் கூடியிருந்தார்.

அப்போது, அந்த மைதானத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியா ரசிகையும் தனது காதலியுமான ஒரு இளம் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

அப்போது, அந்த காதலன், அந்த இளம் பெண்ணிடம் எங்கேயோ கை காட்டி, “அங்கே பார்க்கச் சொல்கிறார்” அதன்படி, அந்த இளம் பெண்ணிடம் திரும்பி அந்த திசையை நோக்கிப் பார்க்கிறார்.

அப்போது, அந்த இளம் பெண் முன்பு உடனே முட்டிப்போட்ட அந்த இளைஞன், தனது கையில் வைத்திருந்த மோதிரத்தை எடுக்கிறார். ஆனால், அதற்குள் அந்த இளம் பெண் அந்த இளைஞன் பக்கம் திரும்பி பார்க்கிறார்.

அப்போது, முட்டிப்போட்ட நிலையில் தனது கையில் உள்ள மோதிரத்தை எடுத்து, அவர் தனது காதலியிடம் லவ் ப்ரோபோஸ் செய்கிறார்.

இதனால், இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான அந்த இளம் பெண், சற்றும் யோசிக்காமல் அவரது காதலை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்து தனது காதலனை கட்டிப்பிடித்து அவர்கள் நாட்டு முறைப்படி லிப் டூ லிப் முத்தம் கொடுத்து, தங்களது அன்பைப் பகிர்ந்துகொண்டு, இருவரும் கட்டியணைத்து முத்தங்களை அன்பாகப் பரிமாறிக் கொண்டனர். 

அந்த நேரத்தில், இதனை வேடிக்கை பார்த்த அந்த மைதானத்தில் கூடியிருந்த பிற கிரிக்கெட் ரசிகர்கள், இந்த லவ் ப்ரோபோஸ்சை பார்த்து சத்தம் போட்டு கை தட்டி ஆராவாரம் செய்தனர்.

குறிப்பாக, இந்த லவ் ப்ரோபோஸ் செய்யும் இந்த அழகான காதல் காட்சிகள், அந்த கிரிக்கெட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்த தனியார் டி.வி. நிறுவனம், இதனையும் அப்படியே ஒளிபரப்பு செய்தது. 

இந்த காதல் ப்ரோபோஸ் காட்சியானது, ஆஷஸ் கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்த ஒட்டுமொத்த ரசிகர்களிடையே நெஞ்சை நெக்குருகச் செய்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இதே போன்று நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது ஒரு இளைஞர், தனது காதலிக்கு லவ் ப்ரோபோஸ் செய்திருந்தார்.

அதே போல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் ஐபிஎல் போட்டியின் போது, சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், தனது காதலியிடம் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தியது பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.