13 கொலை.. 50 பாலியல் பலாத்காரம்.. 120 க்கும் மேற்பட்ட கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சைக்கோ சீரியல் கில்லர் தற்போது சிக்கி உள்ளது பரபரப்பை 
ஏற்படுத்தி உள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவில் தான், இப்படி ஒரு சைக்கோ சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளுமாகத் தேடப்பட்டு வந்தவர் தான், இந்த சைக்கோ கில்லர். கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவையே அச்சுறுத்தி வந்த இந்த சைக்கோ கில்லர் இது வரை 13 கொலைகள், 50 க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரங்கள், சுமார் 120 க்கும் மேற்பட்ட கொள்ளை முயற்சி வழக்குள் என பல்வேறு குற்றங்களைச் செய்து, அமெரிக்காவையே அச்சுறுத்தி வந்தவர் தான் இந்த சைக்கோ கில்லர்.

இவருக்கு 2 பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் East Area Rapist மற்றும் Golden State Killer என இந்த 2 பெயர்களில் போலீசார், இந்த கொலையாளியைத் தேடி வந்தனர். இந்த கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பல போலீசார், இந்த கொலையின் பக்கம் நெருங்கக் கூட முடியவில்லை. திக்கும் திரியாமல், திசையும் தெரியாமல் பல அதிகாரிகள் தடுமாறிப் போயினர்.

இந்த கொலையாளி பற்றிய விசாரிக்கத் தொடங்கிய பல போலீஸ் அதிகாரிகள் கடைசி வரை எதுவும் கண்டுபிடிக்க முடியாமல், பணி ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, இந்த சைக்கோ சீரியல் கில்லரை பிடிக்கும் பொறுப்பு அதிகாரி பால் ஹால் என்பவரிடம் கடந்த 1994 ஆம் ஆண்டு இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரி பால் ஹால், இந்த வழக்கில் துப்பு துழாவி வந்தார். அதுவும், உலக வல்லரசுகளுக்கு உண்டான அதி நவீன டெக்னாலஜ் துணையுடன் இந்த குற்றவாளியை அடையாளம் காணும் முறை கையாளப்பட்டது.

அதாவது, ஒருவரின் மரபணுவின் மாதிரியைப் பதிவேற்றினால், அவர்களின் குடும்பம் மற்றும் மூதாதையர்கள் பற்றிய முழு விவரங்களும் தெரிய வரும். இந்த டெக்னாலேஜ் முறையில் தான், சந்தேகத்திற்குரிய ஒரு குற்றவாளியின் டி.என்.ஏ வை, ஆய்வு செய்து உள்ளனர். இந்த சோதனையில் அந்த டி.என்.ஏ வின் குடும்பத்தினர் தொடர்பான விவரங்கள் கிடைத்தது.

மேலும், சந்தேகத்திற்கு உள்ளான குற்றவாளி பற்றிய விபரங்களை உறுதி செய்வதற்காக, அவன் வீட்டிற்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்த கை ரேகை மாதிரிகளை போலீசார் சேகரித்தனர். இந்த சோதனையின் முடிவில், அந்த கொடூர சைக்கோ கில்லர் யார் என்பதனை போலீசார் கண்டுபிடித்தனர். 

அதன்படி, அந்த சைக்கோ கில்லரின் பெயர் ஜோசப் ஜேம்ஸ் டி அஞ்சலோ என்பதை அமெரிக்க போலீசார் கண்டுபிடித்தனர். அத்துடன், அவன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. இவர், பணியில் இருந்த போது செய்த ஒரு குற்றத்திற்காக, காவல் துறை உயர் அதிகாரிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

குறிப்பாக, இவர் சராசரி மனிதனைப் போலவே, 3 பெண் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதனால், இவர் மேல் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.

மேலும், இவர் ஏற்கனவே போலீஸ் அதிகாரியாக இருந்த காரணத்தினால், தடயம் இல்லாமல் குற்றம் செய்யும் வித்தையையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்.

அதன்படி, ஒவ்வொரு முறையும் குற்றத்தில் ஈடுபடும்போது, ஒவ்வொரு விதமான முகமூடி மற்றும் ஷு அணிந்துகொண்டு சென்று உள்ளார். 

முக்கியமாக, தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்து இவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆட்களுக்கு தகுந்தார்போல், அவர்களின் சூழலுக்கு ஏற்றவாறு பெண்களை மிரட்டியும், கொடுமைப் படுத்தியும் இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் இவரை அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். 74 வயதான ஜோசப் ஜேம்ஸ் டி அஞ்சலோவை விசாரித்த நீதிபதிகள், அவரை ஜாமீனில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர். ஆனால், இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று, பலரும் வலியுறுத்தி உள்ளனர். இதனால், அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.