57 வயது முதியவர் ஒருவர், 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்து உள்ள சம்பவம், இணையத்தில் பெரும் வைரலா வருகிறது. 

அமெரிக்காவில் தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ காத்திருக்கிறது.

அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவர்,  தாத்தாவும் 23 வயது இளம் பெண்ணும் காதலித்து வருவதும், இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போகும் சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் அலிசா ரீனீ என்பவர், டிக்டாக்கில் எப்போதும் ஆக்டிவாக இருக்ககூடிய ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் தான், 23 வயது இளம் பெண் அலிசா ரீனீ, சமீபத்தில் தனது டிக்டாக் பக்கத்தில் தனது தனது காதலன் குறித்து பேசி ஒரு  வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவை தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய உள்ள  23 வயது இளம் பெண் அலிசா ரீனீ, “எங்கள் பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவரை, நான் காதலித்து வருகிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “நாங்கள் இவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறோம் என்றும், ஆனால் என் காதலன் பீட்டருக்கு ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ள நிலையில் அவருக்கு மனைவி மற்றும் மகளும் இருக்கிறார்கள்” என்றும், கூறி உள்ளார்.

என்றாலும், “என் காதலன் பீட்டர், கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னை விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்” என்றும், அந்த இளம் பெண் அலிசா ரீனீ தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, காதலன் பீட்டருக்கு தற்போது வயது 57 ஆகிறது. 

அப்படி, 57 வயதான காதலன் பீட்டர், வெறும் 23 வயதான இளம் பெண் அலிசாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து உள்ளதும், 57 வயதான பீட்டரும் - 23 வயதான இளம் பெண் அலிசாவும் ஒன்றாக காதலர்களாக வெளியே ஊர் சுற்றி வருவதும், அவர்கள் டேட்டிங் செல்வது என்றும், அவர்கள் இருவரம் தங்களது காதல் வாழ்க்கையை ஏக போகமாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மேலும், 57 வயதான காதலனட பீட்டர், தனது இளம் வயது காதலி அலிசாவிற்காக பலவிதமான அதிக விலை உயர்ந்த கிஃப்ட்களை வாங்கி பரிசளித்து உள்ளார் என்றும், அவருக்காக அதிகமான பணம் செலவு செய்து உள்ளதாகவும் தெரிகிறது.

இப்படியாக, தனது காதலன் பீட்டர் பற்றி இளம் பெண் அலிசா பேசி உள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்து இணையவாசிகள் பலரும் பலவிதமான கருததுக்களை பதிவிட்டு வருவது, இந்த வீடியோவை மேலும் வைரலாக்கி வருகிறது.