“90ஸ் கிட்ஸ்களை கடுபேத்தி வெறுப்பேற்றும் விதமாக, ஏற்கனவே 36 திருமணங்கள் செய்துகொண்டு 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 37 வது முறையாக ஒரு பெண்ணை முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

நாகலாந்த் நாட்டில் தான், இப்படி ஒரு ஆச்சரியமூட்டும் அதிசய சம்பவம் நடந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 90ஸ் கிட்ஸ்கள் சிலருக்கு இப்போது வரை திருமணம் நடக்காமல் இருப்பதும், அவர்களுக்கு பெண் கிடைக்காமல் இருப்பதும் பெரும் பாடாகவே இருக்கிறது. 

இதனால், அவர்களும் வேறு வழியின்றி “நாங்கள் முரட்டு சிங்கிள்” என்று கூறிக்கொண்டு சமாளித்துக்கொள்ளும் பல வயதாகிக்கொண்டிருக்கும் இளைஞர்களையும் தமிழ்நாட்டில் பார்க்க முடிகிறது.

இப்படியான நிலையில் தான், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆண்கள் அல்லது பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்துகொண்ட தகவல்கள் கிடைக்கும் போது, தமிழகத்தில் உள்ள 90ஸ் கிட்ஸ்கள் எல்லாம் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள். 

அதில், சில முரட்டு சிங்கிள்கள் சாபம் விடுவதும், சிலர் வயிற்றெரிச்சல் பட்டாலும், “நல்லா இருந்து போடா” என்று, பொறாமையில் வாழ்த்துவதும் கடந்த காலங்களில் இணையத்தில் நாம் தொடர்ந்து பார்த்த சிரித்துவிட்டு, உள்ளுக்குள் பொறாமைப்படும் செய்திகளாகவே அமைந்திருக்கின்றன.

அப்படியான ஒரு செய்தி தான், மீண்டும் நாகலாந்த் நாட்டில் நடித்திருக்கிறது.

நாகலாந்த் நாட்டில் கிட்டதட்ட 75 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் ஏற்கனவே 36 திருமணங்கள் செய்திருக்கிறார். அதில், 28 மனைவிகள் தற்போது உயிருடன் உள்ளனர்.

இந்த 36 மனைவிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 135 குழந்தைகள் பிறந்து உள்ளனர். அந்த 135 குழந்தைகளில் பலருக்கும் திருமணம் ஆன நிலையில், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளாக 126 பேர் உள்ளனர். அதாவது, அந்த 75 வயது முதியவருக்கு 126 பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், 75 வயது மதிக்கத் தக்க அந்த முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  37 வது திருமணம் நடந்து உள்ளது. அந்த முதியவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 37 வது முறையாகத் திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் பரப்பப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது.

அந்த முதியவரின் இந்த 37 வது திருமணமானது, அவரது 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையில் நடந்து உள்ளது. அவர்கள் அனைவரும், இந்த திருமணத்தில் கலந்துகொண்டு அந்த முதியவரை மனதார வாழ்த்தி உள்ளனர். 

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்கில் பார்ககும் இணைய வாசிகள் பலரும், அந்த முதியவர் மீது பொறாமைப்பட்டு, வயிற்றெரிச்சலுடன், “வஞ்சப் புகழ்ச்சியணி” யாக தங்களது கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர். இதனால், முதியவரின் 37 வது திருமண வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.