ஆஸ்திரேலியாவில் 27 வயது இளைஞர் ஒருவர், 61 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 61 வயது மூதாட்டியான ஜாக்வி ஹோவர்டு, தன் வீட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே நடனப் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். 

அந்த நடனப் பள்ளியில் 27 வயதான டெமுஜின் டெரா என்ற இளைஞன், கடந்த ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டு வந்தார். 

தொடக்கத்தில் ஜாக்வி ஹோவர்டு - டெமுஜின் டெரா இடையே குரு - சிஷ்யன் உறவு மட்டுமே இருந்துள்ளது. அதன் படியே, இருவரும் பழகி வந்தனர். 
நாளடைவில், அந்த உறவு நட்பாக மாறியது. அதன் தொடர்ச்சியாக அந்த நட்பு, காதலாக மலர்ந்தது. இதனையடுத்து, ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி தங்கள் காதலை வெளிப்படுத்தி உள்ளனர். இதில், இவருக்கும் பிடித்துப் போகவே, அவர்கள் இருவரும் தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

61 வயது மூதாட்டியான ஜாக்வி ஹோவர்டுக்கும் - 27 வயதான டெமுஜின் டெராவுக்கும் இடையே கிட்டத்தட்ட 34 வயது வித்தியாம் உள்ளது. ஆனால், இந்த வயது வித்தியாசத்தை இருவருமே பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. 

இந்த காதல் திருமணம் குறித்து மனம் திறந்த 27 வயதான டெமுஜின் டெரா, “ஜாக்வியின் நடனப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான்,  மாணவனாகச் சேர்ந்தேன். நாங்கள் இருவரும் தொடக்கத்தில் குரு - சிஷ்யனாகவே பழகி வந்தோம். அதன் பிறகு, எங்களையும் அறியாமல், காதல் உணர்வு எங்கள் இருவருக்குள்ளும் வந்து விட்டது. அந்த காதலை நாங்கள் உணர்ந்தோம்.

பொதுவாகவே வயதான பெண்கள் மேல் எனக்கு ஈர்ப்பு அதிகம். என் காதலிக்குத் திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். ஆனால், அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட வில்லை. எங்கள் காதல் தற்போது திருமணத்தில் கை கூடி உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அதே போல், தங்கள் காதல் மற்றும் காதல் திருமணம் குறித்துப் பேசிய ஜாக்வி ஹோவர்டு, “நான் திருமணமாகி கணவரைப் பிரிந்த வாழ்ந்து வந்தேன். என்னைப் பற்றிய எல்லா விசயங்கையும் நான் அவரிடம் கூறி உள்ளேன். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த பிறகே, என்னை அவர் திருமணம் செய்துகொண்டார்.

குறிப்பாக, என்னையும், டெமுஜினையும் எங்கள் பகுதியில் பலரும் தம்பதி என்றே நம்ப மறுக்கிறார்கள். அதன் காரணமாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலரிடம் நாங்கள் தம்பதி என நிரூபிக்க அவர்கள் முன்பாக நாங்கள் முத்தம் பரிமாறிக் கொண்டோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறிவிட்டுச் சிரிக்கிறார்.

மேலும், “என் மகளுக்கும், என் கணவர் டெமுஜினும் ஒரே வயது தான் ஆகிறது. ஆனாலும், என்னுடைய மகள் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டு விட்டாள். அவளுக்குப் புரிந்து கொள்ளும் பக்குவம் தற்போது இருக்கிறது. 'எங்களது காலாவதியான காதல்' என்கிற கலாச்சார மன நிலையில் என் மகள் இல்லை. 

என்னவென்று, என் காதல் கணவன் டெமுஜினுக்கு முன்னரே நான் இறந்து விடுவேன் என்பது தான் எனக்கு உள்ள ஒரே வருத்தமாகவும், கவலையாகவும் உள்ளது. ஏன் என்றால், என் வயது அப்படி இருக்கிறது” என்று கவலைப்பட்டார்.

இது தொடர்பாக 27 வயதான டெமுஜின் டெரா பேசும் போது, “மரணம் என்பது யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரும். அது இயற்கை. அதைப் பற்றி நாம் இப்போது யோசிக்கத் தேவையில்லை. அது வரும் போது பார்க்கலாம்” என்று கூறினார்.

இதனிடையே, 27 வயது இளைஞர் ஒருவர், 61 வயது மூதாட்டியைக் காதலித்து கரம் பிடித்த சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.