24 வயதான இளம் பெண் ஒருவர், 68 வயது நபரை காதலித்து வருவது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தான் இப்படி ஒரு காதல் கதை அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயதான கொன்னி காட்டன் என்ற இளம் பெண், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். 

அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த 68 வயது மதிக்கத்தக்க ஹெர்ப் டைகர்சன் என்பவரை, அந்த இளம் பெண் சந்தித்து உள்ளார்.

அதன் பிறகு, இவர்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகம் ஆகி, தொடர்ந்து ஒரு நல்ல நண்பர்களாக பேசி பழகி வந்திருக்கிறார்கள். 

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும், அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த நண்பர்கள் ஜோடியானது, தங்களுடைய அன்பை பரஸ்பரமாக புரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இப்படியாக, இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக எல்லா இடங்களுக்கும் சேர்ந்து ஊர் சுற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி உள்ளனர். 

இதனையடுத்து, இவர்கள் இருவம், இவர்களது அன்பையும், காதலையும் புரிந்துகொண்ட நிலையில், ஒருவருக்கொருவர் காதலிக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் தான், வயது வித்தியாசமின்றி இவர்கள் காதலித்த நிலையில், இவர்கள் திருமணத்தில் இணைய நினைத்து, இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு உள்ளனர். 

ஆனால், 24 வயதான கொன்னி காட்டன், “பணத்திற்கு ஆசைப்பட்டு தான் 68 வயதான ஹெர்ப் டைகர்சனை காதலிக்கிறார்” என்று, அந்நாட்டைச் சேர்ந்த பலரும் சமூகவலைதளத்தில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

ஆனால், இது தொடர்பாக பேசிய 24 வயதான கொன்னி காட்டன், 'நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்றவுடன், பலரும் அதிர்ச்சியடைந்தனர் என்றும், நான் அவரை காதலித்த பின்பு, எனக்கு கிடைக்கும் பொதுவான கருத்து என்னவென்றால், நான் 68 வயதான ஹெர்ப் டைகர்சனின் பணத்திற்காக ஆசைப்படுகிறேன் என்று, பலரும் என்னை விமர்சனம் செய்தனர்” என்றும், கவலைத் தெரிவித்து உள்ளார்.

இவைமட்டுமின்றி, “ஹெர்ப் டைகர்சன் என்னுடைய உடலுக்காக மட்டுமே என்னுடன் இருப்பதாக பலரும் கூறுகின்றனர் என்றும், ஆனால் அப்படி எதுவுமு் இல்லை என்றும், என் குடும்பமும் ஆரம்பத்தில் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “என் குடும்பத்தினர் காலப்போக்கில் எங்களை ஏற்றுக் கொண்டனர் என்றும், அதற்கு அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார், சந்தோஷப்படுத்துகிறார் என்பதை அவர்கள் நேரில் பார்த்து தெரிந்து கொண்டனர்” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே போல், இந்த காதல் குறித்து கருத்து தெரிவித்த காதலன் ஹெர்ப் டைகர்சன், “முதலில் என் காதலைப் பற்றி எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “அந்த பெண் என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்பது அசாதாரணமானது” என்றும், அவர் பெருமையோடு கூறினார்.

“அவள், பணத்திற்காக என்னுடன் ஊர் சுற்றுவதாக கூறப்பட்டது என்றும், இந்த கொரோனா காலகட்டம் எங்கள் இருவரையும் சரியாக புரிந்து கொள்ள உதவியது என்றும், இதனை எங்கள் குடும்பத்தினரும் புரிந்து கொண்டனர்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

“நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவும் அவர்களுக்கும் இருந்தது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“நான் இனியும், அவருடன் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புகிறேன்” என்றும், அவர் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

இதனிடையே, “இந்த ஜோடி இருவரும் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். இதைப் பற்றி இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டே போதே, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது” என்றும், அந்நாட்டைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.