சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக நேற்று வெளியான படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை தந்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பேட்ட படக்குழுவினரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், ட்விட்டரில் பேட்ட படம் குறித்து பாராட்டியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிற்கு நன்றியை பதிவிட்டார். மேலும் அனிருத்தின் பின்னணி இசை சிறப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.