சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வெளியிட்டது படக்குழு. அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலாக இருக்கின்றனர் தல ரசிகர்கள்.

தற்போது படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சண்டக்கோழி2, ராட்சசன் போன்ற படங்களையும் சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது கூடுதல் தகவல். பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால், இச்செய்தி சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.