தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.கடைசியாக இவரது சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து விக்ராந்துடன் இணைந்து விஜயசேதுபதி கதையெழுதும் படமொன்றில் நடித்து வருகிறார்.

Vishnu Vishal FIR Firstlook Released Gautam Menon

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் Firstlook போஸ்டரை படக்குழுவினர் நேற்று இரவு வெளியிட்டுள்ளனர்.

Vishnu Vishal FIR Firstlook Released Gautam Menon

இந்த படத்திற்கு FIR என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.விஷ்ணு விஷால் Fizal Ibrahim Raiz என்ற தீவிரவாதியாக தோன்றுவார் என்று தெரிகிறது.கெளதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கவுள்ளார்.சுஜாதா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.மஞ்சிமா மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.இந்த FIR படத்தின் போஸ்டரை கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார்.