மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார்.

Vijay Sethupathi Super Deluxe First Review From Popular Bollywood Director

சமந்தா,மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில்,ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Vijay Sethupathi Super Deluxe First Review From Popular Bollywood Director

இந்த படம் வரும் 29ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே இந்த படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்த பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷியூப் ,இந்த படத்தில் நடிப்பதை தவறவிட்டுவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.

Vijay Sethupathi Super Deluxe First Review From Popular Bollywood Director

தற்போது இவர் மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார் சூப்பர் டீலக்ஸ் அதில் நான் படம் பார்த்துவிட்டேன் ,இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது வருத்தமாக உள்ளது.குமாரராஜா மிகவும் தெளிவான,திறமையான,பயமற்ற ஒரு இயக்குனர்.இவர் இன்னும் நிறைய திறமைகளை பெற்றிருக்கிறார்.இதை தவிர நான் படத்தை பற்றி வேறு ஒன்றும் சொல்ல முடியாது,நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi Super Deluxe First Review From Popular Bollywood Director

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷியூப் இந்த படத்தை பாராட்டி இருப்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.