தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி s தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.  

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த சுவாரஸ்ய தகவலுடன் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறோம்.

மாரி 2 படம் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் இத்தருணத்தில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை கூறிய கலை தாகம் தீரா கலைஞன் தனுஷுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமையடைகிறது நம் கலாட்டா.